This Article is From Oct 26, 2018

மாவோயிஸ்ட் விவகாரத்தில் கைதான செயற்பாட்டாளர்களுக்கு ஜாமீன் மறுப்பு

மாவயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த ஆகஸ்ட் 28-ம்தேதி 5 செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாவோயிஸ்ட் விவகாரத்தில் கைதான செயற்பாட்டாளர்களுக்கு ஜாமீன் மறுப்பு

செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், வெர்னோன் கோன்சால்ஸ் மற்றும் அருண் ஃபெரேரா ஆகியோரின் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது

Pune:

மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், வெர்னோன் கோன்சால்ஸ் மற்றும் அருண் ஃபெரேரா ஆகியோரின் ஜாமீனை புனே நீதிமன்றம் மறுத்துள்ளது.

மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற புகாரின்பேரில் கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது நாட்டின் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் சமூக செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், வெர்னோன் கோன்சால்ஸ், அருண் ஃபெரேரா, வரவர ரவ், கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் சுதா பரத்வாஜ், வெர்னோன் கோன்சால்ஸ் மற்றும் அருண் ஃபெரேரா ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கும்படி கேட்டனர். இந்த வழக்கு புனே மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி கே.டி.வதானே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து நீதிபதி வதானே உத்தரவிட்டார்.

.