This Article is From Nov 25, 2019

அரசியலுக்கு வர நான் ஆசைப்பட்டதில்லை - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

இப்போது நான் எங்கிருந்தாலும் நான் வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் நான் முழு மனதுடன் என் நாட்டிற்காக உழைக்க வேண்டும் நான் இப்போது இந்த நோக்கத்திற்காக மட்டுமே என்னை அர்ப்பணித்துள்ளேன்.

அரசியலுக்கு வர நான் ஆசைப்பட்டதில்லை - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

எப்போது வாசிப்பதில் விருப்பம் இருப்பதாகவும் திரைப்படங்களை பார்க்கவோ, தொலைக்காட்சிகளை பார்க்கவோ ஆர்வம் இல்லை (File photo)

New Delhi:

அரசியலுக்கு வர வேண்டும் என்று நான் ஆசைப்பட்டது இல்லை. ஆனால், இப்போது நானும் அரசியலில் இருக்கிறேன். மக்களுக்காக முடிந்த அளவு சேவையாற்றி வருகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

பிரதமர் மோடி மாதம் தோறும் ‘மன்கி பாத்' வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை ‘மன்கி பாத்' நிகழ்ச்சியின்போது தேசிய மாணவர் படை மாணவர்களுடன் மோடி உரையாடினார். தன்னுடைய பள்ளி நாட்களில் தேசிய மாணவர் படையில் ஒருமுறை கூட தண்டிக்கப்படவில்லை என்று கூறினார். 

மேலும் பேசியதாவது: கூகிள் காரணமாக குறிப்புகளை எழுத குறுக்குவழி இருப்பதால் வாசிப்பு பழக்கம் குறைந்துள்ளதை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார். அரசியலுக்கு வரவில்லை என்றால் என்னவாகியிருபீர்கள் என்று கேட்கிறீர்கள். இது பதிலளிப்பதற்கு சிரமமான கேள்விதான். சிறுவயதில் நாம் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஆசைகளைக் கொண்டிருப்போம். அதேபோல் நானும், ஆனால், நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று விரும்பியது இல்லை. அப்படி நடக்குமென்று எதிர்பார்த்ததுமில்லை. எனினும் இப்போது ஒரு அரசியல்வாதியாக நாட்டு மக்களுக்கு என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக உழைக்க வேண்டும் என்பதே என் நோக்கம் என்றார்.

இப்போது நான் எங்கிருந்தாலும் நான் வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும்  நான் முழு மனதுடன் என் நாட்டிற்காக உழைக்க வேண்டும் நான் இப்போது இந்த நோக்கத்திற்காக மட்டுமே என்னை அர்ப்பணித்துள்ளேன். 

தொலைக்காட்சியை பார்க்கவும் புத்தகங்களை படிக்கவும் நேரம் கிடைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்தவர், எப்போது வாசிப்பதில் விருப்பம் இருப்பதாகவும் திரைப்படங்களை பார்க்கவோ, தொலைக்காட்சிகளை பார்க்கவோ ஆர்வம் இல்லை. ஆனால், தற்போது கூகிள் காரணமாக குறிப்புகளை எழுத குறுக்குவழி இருப்பதால் வாசிப்பு பழக்கம் குறைந்துள்ளதை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

.