This Article is From Sep 26, 2018

மன்மோகன் சிங் பிறந்தநாளிற்கு மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

மன்மோகன் சிங் பிறந்தநாளிற்கு மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்து

2004 - 2014 ஆம் ஆண்டு வரை இந்திய பிரதமராக மன்மோகன் சிங் பணியாற்றியுள்ளார்

New Delhi:

முன்னாள் இந்திய பிரதமர், மன்மோகன் சிங் தனது 86வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

“இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளோடு ஆரோகியத்துடன் இருக்க வேண்டுகிறேன்” என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், “நாட்டை கட்டமைக்க பல ஆண்டுகளாக சுயநலமில்லாமல் பணியாற்றிய, உழைத்த அவரை பாராட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, இன்று பிறந்தநாள் காணும் மன்மோகன் சிங் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் உடல் ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் பதிவிட்டுள்ள வாழ்த்தில், “86வது பிறந்தநாள் காணும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு வாழ்த்துக்கள். புகழ்பெற்ற, நேர்மையான, பணிவான ஆளுமையான அவர் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுகிறேன்” என்றார்.

.