இது தேர்தலுக்கான பட்ஜெட்! - மன்மோகன் சிங் குற்றச்சாட்டு!

இடைக்கால பட்ஜெட் 2019: 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜக படுதோல்வியுற்று நிலையில் வர இருக்கும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள கடைசி சந்தர்ப்பமாக பாஜகவிற்கு இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

இது தேர்தலுக்கான பட்ஜெட்! - மன்மோகன் சிங் குற்றச்சாட்டு!

Interim Budget 2019:இது தேர்தலுக்கான பட்ஜெட் என மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • இது தேர்தலுக்கான பட்ஜெட் என மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
  • விவசாயிகளுக்கு ஓர் ஆண்டுக்கு ரூ.6000 கொடுக்கப்படுவதாக அறிவிப்பு
  • தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு.
New Delhi:

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில், 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வரும் மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி இல்லாத நிலையில், இடைக்கால நிதி அமைச்சரான பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில் குறிப்பிடத்தக்க வகையில், பிரதமரின் கிசான் யோஜனா திட்டம் மூலம், சிறிய விவசாயிகளுக்கு ஓர் ஆண்டுக்கு ரூ.6000 கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு ஹெக்டேர் நிலப்பரப்புள்ள அல்லது அதற்கு குறைவாக உள்ள சிறிய விவசாயிகள் நன்மை அடைவார்கள்.

தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பே இந்த பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில், வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமான வரி செலுத்தும் 3 கோடி நடுத்தர மக்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து முன்னாள் பிரதமரும், நிதியமைச்சருமான மன்மோகன் சிங் என்டிடிவியிடம் கூறும்போது, இது மக்களவை தேர்தலை எதிர்நோக்கி உருவாக்கப்பட்டுள்ள பட்ஜெட்.

அந்த வகையில் சிறு விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர மக்களை கவரும் விதத்தில் பட்ஜெட் அமைந்துள்ளது. இது தேர்தலுக்காக போடப்பட்ட பட்ஜெட் என்பது அனைவருக்கும் தெளிவாக புரியும். இடைக்கால பட்ஜெட்டிற்கான செலவீனத்தை சரியாகக் கணக்கிடாமல் மத்திய அரசு செயல்படுத்தப்பட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.


 

More News