This Article is From Aug 30, 2019

18 ஆண்டுகள் அயராத உழைப்பு! 300 ஏக்கரில் காட்டை உருவாக்கி சாதித்த இளைஞர்!!

காட்டை உருவாக்கிய இளைஞரை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர். தற்போது சிறு குழு ஒன்றை ஆரம்பித்து தனது பணியை தொடங்கி வருகிறார்.

18 ஆண்டுகள் அயராத உழைப்பு! 300 ஏக்கரில் காட்டை உருவாக்கி சாதித்த இளைஞர்!!

சிறுவயது முதலே தனக்கு மரங்கள் மீது காதல் இருப்பதாக கூறுகிறார் இளைஞர் மொய்ரங்தம் லோயா.

Imphal:

மணிப்பூர் மாநிலத்தில் தனது வேலையை விட்டு விட்டு 18 ஆண்டுகள் அயராது உழைத்து, 300 ஏக்கர் காட்டை இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார். அவரது சம்பவம் பலருக்கு உத்வேகத்தை அளித்து வருகிறது. 

இளம் வயது முதலே தனக்கு மரங்கள் முதல் காதல் இருப்பதாக கூறும் இளைஞர் மொய்ரங்தம் லோயா, தற்போது குழு ஒன்றை ஆரம்பித்து மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தனது 18 ஆண்டுகள் உழைப்பு குறித்து லோயா கூறியதாவது-

எனது கல்லூரிப் படிப்பை முடித்தபின்பு வீட்டுக்கு திரும்பினேன். அப்போதுதான் எனது பகுதியில் இருந்த காடு அழிக்கப்பட்டிருப்பதை பார்த்தேன். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளித்தது. 

இதையடுத்து காட்டை உருவாக்க வேண்டும் என்று முடிவு எடுத்து 18 ஆண்டுகள் உழைத்தேன். இப்போது 300 ஏக்கர் அளவில் காடு உருவாகியுள்ளது. இங்கு சுமார் 250 வகையான மரங்கள் இருக்கின்றன. 25 வகையான மூங்கில் மரங்கள் உள்ளன. பலதரப்பட்ட பறவைகளும், பாம்புகளும், வன விலங்குகளும் இந்த காட்டில் இருக்கின்றன. 

காட்டை உருவாக்கும் பணியின்போது வேட்டைக்காரர்களின் தொந்தரவு, மரம் வெட்டுபவர்களின் தொல்லை உள்ளிட்டவற்றை சமாளிக்க வேண்டியது இருந்தது. மக்களை சந்தித்து மரங்களை வெட்டுவதால் என்ன பிரச்னை ஏற்படும் என்பதை எடுத்துரைத்தேன். அதன்பின்னரும் பிரச்னை தொடர்ந்தது. பின்னர் மக்கள் புரிந்து கொண்டார்கள். 
இவ்வாறு அவர் கூறினார். 

இளைஞரின் முயற்சியை மணிப்பூர் அரசு பாராட்டியுள்ளது. லோயாவைப் போல பல இளைஞர்கள் காட்டை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

.