சுங்க கட்டணம் செலுத்துவதை தவிர்க்க கார் உரிமையாளரின் அடடே யோசனை! - திகைத்த போலீசார்!

ஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ஹரி ராகேஷ், காருக்கு சுங்க கட்டணம் செலுத்துவதை தவிர்க்க இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சுங்க கட்டணம் செலுத்துவதை தவிர்க்க கார் உரிமையாளரின் அடடே யோசனை! - திகைத்த போலீசார்!

காரின் நம்பர் பிளேட்டிற்கு பதிலாக ’AP CM Jagan' என அச்சிடப்பட்டிருந்தது.


Hyderabad: 

சுங்க கட்டணம், பார்க்கிங் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை தவிர்க்க கார் உரிமையாளர்கள் பலர் போலீஸ், ஊடகம், நீதிபதி அல்லது சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதை பார்த்திருப்போம், ஆனால், ஹைதராபாத்தில் ஒரு கார் உரிமையாளர் செய்த காரியம் போலீசார் உட்பட அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. 

மற்றவர்களை போல காரில் ஸ்டிக்கர் ஒட்டாமல், இந்த கார் உரிமையாளர் செய்த செயல் நம்மை வியக்க வைக்கிறது. அப்படி, என்ன செய்தார் என்கிறீர்களா?.. அந்த காரின் நம்பர் பிளேட்டிற்கு பதிலாக காரின் முன்பக்கமும், பின்பக்கமும் 'AP CM Jagan' என அச்சிடப்பட்ட இரும்பு பிளேட்டை காரில் பொருத்தி சுற்றி வந்துள்ளார். 

இதனிடையே, கடந்த அக்.19ம் தேதி அன்று போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, அந்த வழியாக வந்த இந்த காரை கண்டு போலீசார் அதிர்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த காரை மறித்து அதன் உரிமையாளரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

இதில், அந்த காரின் உரிமையாளர் ஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ஹரி ராகேஷ் என்பது தெரியவந்தது. மேலும், அவர் சுங்க கட்டணம் செலுத்துவதை தவிர்க்கவும், போலீசாரின் வாகன சோதனையில் சிக்காமல் செல்லவும் இது போன்ற வினோத முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, அந்த காரை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் ராகேஷ் மீது ஏமாற்று மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................