This Article is From Sep 25, 2019

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்! - விரைந்து மீட்ட ரயில்வே போலீசார்! வீடியோ..

அகமதாபாத் ரயில் நிலையத்தில் இருந்து ஆஷ்ரம் விரைவு ரயிலில் ஏற முயன்ற போது இளைஞர் ஒருவர் கீழே விழுந்தார்.

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்! - விரைந்து மீட்ட ரயில்வே போலீசார்! வீடியோ..

ரயில்வே போலீசார் விரைந்து செயல்பட்டதால் அந்த இளைஞரின் உயிர் தப்பியது.

அகமதாபாத் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்த நிலையில், ரயில்வே போலீசார் விரைந்து செயல்பட்டதால் அந்த இளைஞரின் உயிர் தப்பியது. 

இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை இந்திய ரயில்வேதுறை அமைச்சகம் தனது ட்வீட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது. அதில், படிகட்டில் இருந்து இறங்கி வரும் இளைஞர் ஒருவர், ஆஷ்ரம் விரைவு ரயில் நகர்ந்து செல்வதை பார்த்துவிட்டு வேகமாக ஓடிசென்று அதில் ஏற முயற்சி செய்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக ரயில் படியில் கால் வைக்கும் போது தவறி விழும் அவர், படிக்கட்டுக்கும், ப்ளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கினார். 

தொடர்ந்து, ரயிலுக்கு இடையில் சிக்கி, இளைஞர் இழுத்துச் செல்லப்படுவதை பார்த்த ரயில்வே காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அந்த இளைஞரை ரயிலுக்குள் தள்ளி விட்டனர். சரியான நேரத்தில் ரயில்வே காவல்துறையினர் விரைந்து செயல்பட்டதால் அந்த இளைஞர் உயிர்தப்பினார். 

தொடர்ந்து, ரயில்வே அமைச்சகம் அந்த பதிவில், நீங்கள் எவ்வளவு பலசாலியானவராகவும்,ஸ்மார்ட்டானவராகவும் இருந்து கொள்ளுங்கள், ஆனால் ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ முயற்சி செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளது.


இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டதை தொடர்ந்து, இதற்கு 12 ஆயிரம் லைக்குகள் குவிந்துள்ளன. 1.4 லட்சம் பேர் இதனை பார்வையிட்டுள்ளனர். மேலும், கமெண்ட் பிரிவில் ரயில்வே போலீசாரை பலரும் பாராட்டியுள்ளனர். 

 

.