குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: அமெரிக்கருக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

அமெரிக்காவின் மோன்டானாவில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: அமெரிக்கருக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

ஹைலைட்ஸ்

  1. இந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்துள்ளது
  2. 2016 ஆம் ஆண்டு தான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
  3. 50 ஆண்டுகள் கழித்து தான் குற்றவாளிக்கு பரோல் கிடைக்கும்

அமெரிக்காவின் மோன்டானா மாகாணத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவருக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்ட டேவிட் டீன் கோமியோடிஸ் என்பவருக்குத் தற்போது 39 வயதாகிறது. அவர் பாலியல் தொந்தரவு கொடுத்த குழந்தைகளுக்கு தற்போது 10 மற்றும் 19 வயதாகிறது. டேவிட் பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக, குழந்தைகளினன் தாயார் கடந்த 2016 ஆம் ஆண்டு போலீஸில் புகார் கொடுத்தார். அதில், தன் குழந்தைகளுக்கு முறையே 6 மற்றும் 12 வயதிருந்த போது, டீன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று தெரிவித்திருந்தார். அப்போது, இரண்டு குழந்தைகளும் 18 வயதுக்குக் கீழேயே இருந்தனர். இதனால், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரிவில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்தான விசாரணை முடிந்துள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டு தற்போது, டேவிடுக்கு 100 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு 50 ஆண்டுகள் கழித்து தான் பரோல் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

குழந்தைகளிடம் நடந்த விசாரணையின் போது, ஆண் சிறுவனுக்கும் பெண் சிறுமிக்கும் டேவிட், பல ஆண்டுகள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார் என்று தெரிய வந்துள்ளது. (इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................