கரடிகளுக்கு உணவளித்தபோது நடந்த வேடிக்கை சம்பவம்! #ViralVideo

கீழே வழுந்த ஐபோனை அங்கிருந்த கரடி ஆராய்ந்த காட்சி!

 Share
EMAIL
PRINT
COMMENTS
கரடிகளுக்கு உணவளித்தபோது நடந்த வேடிக்கை சம்பவம்! #ViralVideo

சீனாவில் உள்ள ஒரு வனவிலங்கு பூங்காவில் இந்த சம்பவம் நடந்தது!


சீனாவில் உள்ள யான்செங் வனவிலங்கு பூங்காவில் அமைந்திருக்கும் கரடிகளுக்கு தனது ஆப்பிள்களை கொடுக்க முயன்ற நபர் ஒருவர், தன்னை அறியாமல் தனது ஐ போனை தூக்கிப் போட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் சிஜிடிஎன் செய்தி நிறுவனத்தின்படி, அந்த நபர் கரடிகளுக்கு ஆப்பிளை கொடுக்க முயன்றதாகவும், அறியாமல் தனது ஐபோனை எரிந்ததாக' கூறியுள்ளது. அந்த வீடியோ காட்சிகயில் உள்ளே விழுந்த ஐபோனை பார்த்த கரடிகள் வாயில் வைப்பதற்கு பதிலாக, அதை என்னவென்று பார்த்தது வீடியோவை ரசிக்கும் படி மாற்றியது
 

 
 
 

பின்னர் அந்த ஐபோனை வனவிலங்கு பூங்கா அதிகாரிகள் மீட்டனர். போன் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் அதைப் பார்த்து, பகிர்ந்து வருகின்றனர். பல நகைச்சுவை கமேன்ட்களும் பகிரப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர், சீனாவில் 8 வயது சிறுமி பாண்டா கரடிகளின் கூட்டிற்குள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................