பழைய காரினை விற்று ஏமாற்றிய அரசு அலுவலர் கைது

மாஜிஸ்திரேட் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மக்களிடம் விற்று மக்களை ஏமாற்றியதாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

பழைய காரினை விற்று ஏமாற்றிய அரசு அலுவலர் கைது

புகார் அளித்த ஜஸ்பால் சிங் ரூ. 1.60 லட்சம் வரை இழந்துள்ளார்.

டெல்லியில் துணைப் பிரிவு நீதிபதி அலுவலகத்தில் பணியாற்றியவரொருவர் பயன்படுத்திய கார்களை ஏமாற்றி விற்றுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட சத்னம் சிங், கிழக்கு டெல்லியில் லக்‌ஷ்மி நகரில் வசித்து வருகிறார்.  மாஜிஸ்திரேட் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மக்களிடம் விற்று மக்களை ஏமாற்றியதாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

ஏமாற்றப்பட்ட நபரான ஜஸ்பால் சிங் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்படி சத்னம் சிங் கைது செய்யப்பட்டார். காவல்துறையின் சிசிடிவி காட்சிகளை கண்காணித்து அதன் பின்னரே கைது செய்துள்ளனர்.

விசாரணைகள் மேலும் தொடர்கின்றன என்று அதிகாரி கூறினார்.

புகார் அளித்த ஜஸ்பால் சிங் ரூ. 1.60 லட்சம் வரை இழந்துள்ளார்.