பிரசவத்துக்காக 6 கி.மீ கர்ப்பிணி மனைவியை தொட்டிலில் தூக்கிச்சென்ற கணவன்!!

மருத்துவனைக்கு செல்லும் வழியிலே அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிரசவத்துக்காக 6 கி.மீ கர்ப்பிணி மனைவியை தொட்டிலில் தூக்கிச்சென்ற கணவன்!!

னது மனைவியை மற்றொருவர் துணையுடன் 6 கி.மீ தொட்டிலில் வைத்து தோளில் சுமந்து சென்றுள்ளனர். (Representational)

Erode, Tamil Nadu:

சாலைகளில் ஆம்புலன்ஸ் வர வசதியில்லாததால், கர்ப்பிணி மனைவியை தொட்டிலில் வைத்து 6 கி.மீ தூக்கி சென்றுள்ளார். 

ஈரோடு மாவட்டம் பர்கூர் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரை பிரசவத்துக்காக அவரது கணவர் மற்றொருவர் துணையுடன் தொட்டிலில் வைத்து தோளில் சுமந்து படி 6 கி.மீ தூக்கிச் சென்றுள்ளார். அவரது வீடு இருக்கும் பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால், அங்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு வழியில்லை. 

இதனால், துணியில் தொட்டில் கட்டி மனைவியை மருத்துவமனை அழைத்துச்சென்றுள்ளார். அப்போது, 6 கி.மீ தூரத்தை கடந்ததும், ஒரு ஜீப் ஒட்டுநரின் துணையுடன் மருத்துவமனை விரைந்துள்ளனர். 

எனினும், அவர்கள் மருத்துவமைனை செல்வதற்கு முன்பே அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து, தாயும், சேயும் நலமுடன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

More News