போலியான மக்களவை தேர்தல் தேதியை இணைய தளத்தில் வெளியிட்டவர் கைது

இணைய தளத்தை பிரபலம் அடைய செய்வதற்காக தவறான செய்தி பரப்பப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
போலியான மக்களவை தேர்தல் தேதியை இணைய தளத்தில் வெளியிட்டவர் கைது

www.mytechbuzz.in என்ற இணையதளத்தில் போலியான மக்களவை தேர்தல் தேதி வெளியானது.


New Delhi: 

போலியான மக்களவை தேர்தல் தேதியை இணைய தளத்தில் வெளியிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட இணைய தளத்தை பிரபலம் அடைய செய்வதற்காக அவர் இந்த வேலையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த கோமந்த் குமார் என்பவர் www.mytechbuzz.in என்ற இணைய தளத்தை பிரபலம் அடைய செய்வதற்காக தவறான தகவல்களை பதிவேற்றம் செய்திருக்கிறார். 

இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி புகார் அளித்திருக்கிறார். இதன்பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தவறான தகவல் வாட்சப் குரூப்பில் பரவியிருக்கிறது. கைது செய்யப்பட்டவரிம் இருந்து எலக்ட்ரானிக் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................