மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சமூக வலை தளத்தில் விமர்சித்தவர் கைது

திரிபுரா மாநிலம் தலாய் மாவட்டத்தில் உள்ள குலாய் பகுதியை சேர்ந்த துஷார் சர்மா என்பவரை மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர்

மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சமூக வலை தளத்தில் விமர்சித்தவர் கைது

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Ambassa (Tripura):

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியை தரக்குறைவாக விமர்சித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்படுவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில்விசாரணை மேற்கொண்ட திரிபுராவின் தலாய் மாவட்ட போலீசார் துஷார் சர்மா என்பவரை கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை கடந்த 6-ம் தேதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்பின்னர், அவரை அம்பாசாவில் உள்ள முதன்மை அமர்வு நீதிபதி முன்பு அதிகாரிகள் ஆஜர் படுத்தினர். அங்கு மேற்கு வங்க போலீசார், துஷாரை தங்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே துஷார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை நீதிபதி மறுத்துள்ளார்.

நாளை அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். துஷாரை மேற்கு வங்கம் கொண்டு வருவதற்காக அம்மாநில போலீசார் திரிபுராவில் முகாமிட்டுள்ளனர்.

Listen to the latest songs, only on JioSaavn.com