நடத்தையில் சந்தேகம் : தோழியின் முகத்தை அடையாளம் தெரியாதபடி சிதைத்த இளைஞன்!!

போலீசார் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்ட இளைஞன், சில ஆண்களுடன் தனது தோழி நெருக்கத்தில் இருந்ததால் கொன்றதாக கூறியுள்ளார்.

நடத்தையில் சந்தேகம் : தோழியின் முகத்தை அடையாளம் தெரியாதபடி சிதைத்த இளைஞன்!!

கொலை செய்யப்பட்ட இளம்பெண் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த மாடல் குஷி பரிகார் என தெரியவந்துள்ளது.

Nagpur:

தனது தோழியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரைக் கொன்று முகத்தை சிதைத்துள்ளார் ஒரு இளைஞர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அங்கு மாடலிங் செய்து வந்த 19-வது இளம்பெண் குஷி பரிகாரும், அஷ்ரப் சேக் என்ற இளைஞரும் நெருங்கிப் பழகி வந்தனர். தொழில் ரீதியாக குஷிக்கு ஆண் நண்பர்கள் சிலர் இருந்துள்ளனர்.

அவர்களுடன் நட்பில் இருப்பது அஷ்ரபுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது காரில் தோழி குஷியை அழைத்துக் கொண்ட கடந்த வெள்ளியன்று பந்துர்னா – நாக்பூர் நெடுஞ்சாலையில் அஷ்ரப் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களிடையே வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது. இதையடுத்து தோழி குஷியை அடித்துக் கொன்ற அஷ்ரப், அவரது முகத்தை அடையாளம் தெரியாதபடி சிதைத்துள்ளார்.

இதுபற்றி தகவல்அறிந்த போலீசார் துப்பு துலக்கி விசாரணை நடத்தி சமூக வலைதளங்களின் உதவியால் கொலை செய்யப்பட்ட குஷி பரிகார் என கண்டுபிடித்தனர்.

கொலை செய்த அஷ்ரபும் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆண் நண்பர்களுடன் தனது தோழி நெருங்கிப் பழகியதால் அதைப் பிடிக்காமல் கொலை செய்ததாக அஷ்ரப் வாக்கு மூலம் அளித்துள்ளார்.