ராபர்ட் வதேராவுக்கு ஆதரவு தெரிவிக்கும் மம்தா பானர்ஜி

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

வதேரா மீதான விசாரணை சீரியஸான விஷயம் அல்ல என்று கூறியுள்ளார் மம்தா


Kolkata: 

ஹைலைட்ஸ்

  1. ராபர்ட் வதேராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி
  2. வழக்கில் சீரியஸான விஷயம் என்று ஏதும் இல்லை என்கிறார் மம்தா
  3. வேண்டுமென்றே பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது மத்திய அரசு: மம்தா

சோனியா மருமகன் ராபர்ட் வதேரா மீதான விசாரணை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் அது ஒரு சீரியஸான விஷயமே அல்ல என்றும், எதிர்க்கட்சிகள் ஓரணியில் இருப்பதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்குப்பகுதியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையே அவரது கணவர் ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணையை சந்தித்தார்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் லண்டனில் அவர் சொத்துகளை வாங்கியுள்ளதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது. இது சம்பந்தமாக அவரிடம் சுமார் 5 மணி நேரமாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், ராபர்ட் வதேராவுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

ராபர்ட் வதேரா விஷயத்தில் சீரியஸாக எதுவுமே நடக்கவில்லை. விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்து நோட்டீஸ் அனுப்புவது என்பது வழக்கமான நடைமுறைதான். அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். தேர்தல் வரும் நேரத்தில் வேண்டுமென்றே இதுபோன்ற வேலைகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

2 நாட்களுக்கு முன்பாக நடந்து முடிந்த சிபிஐ விசாரணை விவகாரத்தில் மம்தாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக கட்சி தலைவர் ராகுல் காந்தி மம்தாவை போனில் தொடர்பு கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது.லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................