எதிர்ப்பிலும் முதல் ஆள்; வாழ்த்துவதிலும் முதல் ஆள்- PM Modi-க்கு மம்தாவின் பிறந்தநாள் வாழ்த்து!

PM Modi's 69th Birthday: நாளை பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ளார் மம்தா

 Share
EMAIL
PRINT
COMMENTS
எதிர்ப்பிலும் முதல் ஆள்; வாழ்த்துவதிலும் முதல் ஆள்- PM Modi-க்கு மம்தாவின் பிறந்தநாள் வாழ்த்து!

கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி தலைமையில், “ஒரு தேசம், ஒரு தேர்தல்” என்கிற திட்டம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. அதில் மம்தா, பங்கேற்கவில்லை


பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

“பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மம்தா. வங்க மொழியிலும் பிரதமருக்கு அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
 

நாளை பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ளார் மம்தா. இன்று மாலை டெல்லிக்கு வருகிறார் மம்தா பானர்ஜி.லோக்சபா தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி, மோடியை இப்போதுதான் முதன்முறையாக நேரில் சந்திக்க உள்ளார். மேற்கு வங்க மாநிலப் பிரச்னைகள் குறித்து இருவரும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி தலைமையில், “ஒரு தேசம், ஒரு தேர்தல்” என்கிற திட்டம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. அதில் மம்தா, பங்கேற்கவில்லை. அந்த விவகாரத்தைப் பொறுத்தவரை ஒரு நாளில் பேசி முடிவெடுக்க முடியாது என்று தெரிவித்தார் மம்தா. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................