This Article is From May 26, 2019

சிவப்பும் காவியானது இடதுசாரிகளின் வாக்கு பாஜகவிற்கு சென்றது ; உண்மையுடன் மம்தா பானர்ஜி

அதிகாரமற்ற முதலமைச்சராக இருக்க முடியவில்லை. அதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. நான் முதலமைச்சராக தொடர விரும்பவில்லை என்று தெரிவித்ததாக கூறினார்.

கடந்த ஆறு மாதங்களாக என்னால் பணிபுரிய முடியவில்லை

ஹைலைட்ஸ்

  • முதல்வர் பதவி என் அடையாளமல்ல -மம்தா
  • கட்சிதான் என் அடையாளம் -மம்தா பானர்ஜி
  • இடது சாரிகளின் வாக்கு பாஜகவிற்கு சென்றது.
Kolkata:

தேசிய தேர்தல் சந்திப்பிற்கு பின் நடந்த முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் தான் முதல்வர் பதவியில் இருக்க விரும்பவில்லை என்று கட்சி மேலிடத்தில் கூறியதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கட்சி மேலிடத்தில் கடந்த ஆறு மாதங்களாக என்னால் பணிபுரிய முடியவில்லை. அதிகாரமற்ற முதலமைச்சராக இருக்க முடியவில்லை. அதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. நான் முதலமைச்சராக தொடர விரும்பவில்லை என்று தெரிவித்ததாக கூறினார்.

நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 18 இடங்களைப் பெற்றது.திரிணாமூல் காங்கிரஸ் 22 இடங்களைப் பெற்றது.

பாஜகவின் ஓட்டுகள் இடது சாரிகளின் ஓட்டுகள். நாங்கள் தொடர்ந்து மக்களிடம் பணிபுரிந்து வாக்கு சதவீதத்தை அதிகரிப்போம் என்று கூறினார்.

தேசிய அளவில் பாஜக 303 இடங்களைப் பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 352 இடங்களைப் பெற்றது.

ராஜஸ்தான், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பாஜக எப்படி வெற்றி பெற்றது.மக்கள் பேச அஞ்சுகிறார்கள் ஆனால் நான் பயப்படமாட்டேன்.

மிகப் பெரும் வெற்றி சந்தேகத்தைக் கொடுக்கிறது.எதிர்கட்சிகளை பல மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக விரட்டியுள்ளது.என்று கூறினார்.

.