குடியுரிமை மசோதாவைக் கண்டித்து மம்தா தலைமையில் பேரணி!! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

கொல்கத்தாவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி குறித்து மேற்கு வங்க கவர்னர் தனது ட்விட்டர் பதிவில், 'குடியுரிமை திருத்த மசோதா மிகுந்த கோபத்தை எனக்கு அளிக்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது'என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை மசோதாவைக் கண்டித்து மம்தா தலைமையில் பேரணி!! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து பேரணியாகச் சென்ற மம்தா பானர்ஜி.

ஹைலைட்ஸ்

  • Mamata Banerjee Rally On Citizenship Act "Unconstitutional": Governor
  • Earlier, Mamata Banerjee had urged people to join her rally
  • Governor said he was "extremely anguished" over the move
New Delhi:

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில், குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த சட்டத்திற்கு எதிரான வாசகங்களை முழக்கமிட்ட அவர்கள், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை ஏந்திச் சென்றனர். 

மம்தா தனது பேரணியை அம்பேத்கர் சிலையில் இருந்து தொடங்கி ரெட் ரோடு வரியாக ஜோரசங்கே தகுர்பாரியில் நிறைவு செய்தார். இது பிரபல வங்க கவிஞர் ரவிந்திர நாத் தாகூரின் குழந்தைப் பருவ ஊராகும். மம்தாவின் பேரணிக்கு கவர்னர் ஜெகதீப் தங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'முதல்வர் மம்தா பானர்ஜியும், அமைச்சரிகளும், குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து பேரணி நடத்தியுள்ளனர். இது எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது அல்ல. இதுபோன்ற செயல்களில் மம்தா பானர்ஜி ஈடுபடக் கூடாது என்று அவரை கேட்டுக் கொள்கிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மசோதாவைக் கண்டித்து மம்தா பானர்ஜி, ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்தார். அவர் தனது பதிவில், 'அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து எனது தலைமையில் கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி நடைபெறும். சரியாக 1 மணிக்கு ரெட் ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலையில் தொடங்கும் இந்த பேரணிய ஜோரசங்கோ தகுர்பாரியில் நிறைவு பெறும். இதில் அனைத்து சமூக மக்களும் அமைதியான முறையில், சட்டங்களுக்கு உட்பட்டு கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

.

புதன் கிழமை வரையில் இதுபோன்ற பேரணிகளை நடத்துவதற்கு மம்தா திட்டமிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் மசோதாவை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் அதனை தனது மேற்கு வங்க மாநிலத்திற்குள் செயல்படுத்த விட மாட்டேன் என்று மம்தா கூறியுள்ளார். 

மேற்கு வங்கத்தில் 2021-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜகதான் சரியான போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2015-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்கள் அல்லாத வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்த மசோதா வழிவகை செய்கிறது. 

மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டிருக்கும் சூழலில் அதுபற்றி ஆலோசனை நடத்த தலைமை செயலர், மாநில காவல் துறை தலைவர் ஆகியோருக்கு கவர்னர் சம்மன் அனுப்பியுள்ளார். நேற்று முதல் வன்முறை காரணமாக மாநிலத்தின் சில இடங்களில் இன்டர்நெட் சேவைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

நேற்றும் மாநிலத்தின் பல இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ்பேரணி நடத்தியுள்ளது. இதில் கட்சியின் அமைச்சர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இது முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டுவது போல் உள்ளதாகவும் அவர்கள் வலியுறுத்தினர். 

டெல்லியிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ளன. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழகம், உத்தரப்பிரதேசத்தின் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய தடியடியில் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. 100-க்கும் அதிமான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவாக மற்ற சில பல்கலைக் கழக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். 
 

More News