This Article is From Jun 08, 2019

சர்ச்சை பேச்சை மீண்டும் தொடங்கிய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் : மம்தா ஒரு ‘கிம் ஜாங் உன்’

மம்தா பானர்ஜி மாநில அரசின் நிதிப்பற்றாக்குறையை கேட்டு தீர்க்கும் அளவிற்கு நிதி அயோக்கிற்கு அதிகாரம் ஏதும் இல்லை என்றும் அதில் கலந்து கொள்வது நேர விரயம் என்றும் தெரிவித்திருந்தார்

சர்ச்சை பேச்சை மீண்டும் தொடங்கிய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் : மம்தா ஒரு  ‘கிம் ஜாங் உன்’

இதற்கு முன்பு சர்ச்சை பேச்சிற்கு கிரிராஜ் சிங்கை அமித் ஷா கண்டித்திருந்தார்.

New Delhi:

யூனியன் அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய பேச்சினால் பிரபலமடைந்தவர். இந்த முறை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்- உடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். 

“மம்தா பானர்ஜி  ஜிம் ஜாங் உன் போல்  செயல்படுகிறார். யாருடைய குரல் உயர்ந்தாலும் அவர்களை கொன்று விட்டு வெற்றி வாகை சூடுகிறார்” என்று கிரிராஜ் சிங் ஏஎன் ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். 

மேலும் “இதுதான் மம்தா பானர்ஜியின் அரசு. அவர் இந்திய அரசியல்சட்டத்தை மதிக்கவில்லை. மம்தா பானர்ஜி பிரதமரை பிரதமராக மதிப்பதில்லை. அரசியலமைப்புக்குள் இருக்க விரும்பியதில்லை. மம்தா பானர்ஜியின் கவுண்டவுன் தொடங்கிவிட்டது மக்கள் வளர்ச்சியை மட்டுமே விரும்புகிறார்கள்” என்று பாஜக கிரிராஜ் சிங் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

vi52de7

மேற்கு வங்கத்தில் 54 பணியாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திரிணாமூல் காங்கிரஸ்தான் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டி வருகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இறந்த 54 பணியாளர்களின் குடும்பத்தினரையும் பாஜக அழைத்து கெளரவித்தது. 

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு மம்தா பானர்ஜி கலந்து கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும் கொலைக் குற்றச்சாட்டினை ‘முற்றிலும் உண்மைக்கு புறம்பானது' என்று தெரிவித்துள்ளார். 

நேற்று பிரதமர் கூட்டும் நிதி அயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அறிவித்தார். மாநில அரசின் நிதிப்பற்றாக்குறையை கேட்டு தீர்க்கும் அளவிற்கு நிதி அயோக்கிற்கு அதிகாரம் ஏதும் இல்லை என்றும் அதில் கலந்து கொள்வது நேர விரயம் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.