ஃபனி புயல் குறித்து காலாவதியான பிரதமரிடம் பேச விரும்பவில்லை - மம்தா பானர்ஜி

“புயலுக்கு முன் மம்தா திதியிடம் நான் பேச முயற்சித்தேன். ஆனால் அவரின் அகங்காரம் என்னிடம் பேச மறுத்து விட்டது” என்று பிரதமர் கூறினார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஃபனி புயல் குறித்து காலாவதியான பிரதமரிடம் பேச விரும்பவில்லை - மம்தா பானர்ஜி

இது குறித்து மம்தா “ஃபனி புயல் குறித்து காலவதியான பிரதமரிடம் பேச விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.


Bishnupur: 

மேற்கு வங்கம் முதலமைச்சரான மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை மீண்டும் அழைத்து பேசவில்லை என்பதை அறிவித்துள்ளார். பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் ஃபனி புயல் குறித்து கேட்க மம்தா பானர்ஜியை அழைத்தபோது அவர் பதிலளிக்கவில்லை என்று தெரிவித்தார்.  இது குறித்து மம்தா  கூறுகையில் “ஃபனி புயல் குறித்து காலவதியான பிரதமரிடம் பேச விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

புயல் நிவாரணத்தைப் வைத்து “மோடி அரசியல்” செய்வதாக குற்றம் சாட்டியுள்ளா. ஒடிசா மற்றும் வங்காளப் பகுதிகளில் கடந்த வார இறுதியில் பேரழிவை ஏற்படுத்தும் புயல் உண்டானது. 

மேற்கு வங்கத்தில் உள்ள மக்களைப் பற்றி கவலையாக உணர்ந்ததால் சூறாவளிக்கு முன்னர் மோடி முதலமைச்சரை அழைத்ததாகக் கூறியிருந்தார். 

"புயலுக்கு முன் மம்தா திதியிடம் நான் பேச முயற்சித்தேன். ஆனால் அவரின் அகங்காரம் என்னிடம் பேச மறுத்து விட்டது" என்று பிரதமர் கூறினார். 

ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏராளமான பகுதிகளை பார்வையிட்டார். ஒடிஸாவின் முதலமைச்சர் நவீன் பட்நாய்க்கை சந்தித்தார். பின்னர் ஹிந்தி ட்விட்டில்  “மம்தா மீண்டும் என்னை அழைப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. வங்காள மக்களை குறித்த கவலை எனக்கிருந்தது. இரண்டாவது முறையும் என்னிடம் பேச மறுத்து விட்டார்” என்று தெரிவித்திருந்தார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................