வரலாற்றை திரித்து மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறது பாஜக - மம்தா குற்றச்சாட்டு

மத்தியில் ஆளும் பாஜக அரசு விளம்பரத்துக்கா மட்டுமே நிதியை செலவு செய்வதாக மம்தா பானர்ஜி புகார் தெரிவித்துள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
வரலாற்றை திரித்து மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறது பாஜக - மம்தா குற்றச்சாட்டு

அசாமில் இருந்து 40 லட்சம் பேரை வெளியேற்ற பாஜக முயற்சிப்பதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.


Cooch Behar: 

மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அம்மாநில முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது-
வரலாற்றை திரித்துக்கூறி மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. இதனை மேற்கு வங்காள மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

அசாமில் உள்ள 40 லட்சம்பேரை வெளியேற்றுவதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. இதுதொடர்பாக கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

அதில் தங்களது பெயர் இல்லாதவர்களில் சிலர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதனை இங்குள்ள மேற்கு வங்காள பாஜகவினர் ஏன் கேட்கவில்லை?. மகாத்மா காந்தியின் கொள்கைகளை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.

மத கலவரத்தை தடுத்து நிறுத்துவதற்காக பெலகடா பகுதியில் அவர் உண்ணா விரதம மேற்கொண்டார். விளம்பரத்துக்காக மட்டுமே மத்திய அரசு பணத்தை செலவழிக்கிறது. மக்கள் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை.

இவ்வாறு மம்தா பேசினார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................