’கடலில் தொலைந்து போனேன்’.. பிரதமர் மோடியின் கடலோர கவிதை!! இது புதுசு!!

Mamallapuram Summit: இதுதொடர்பான தனது கவிதையை இன்று சமூகவலைதளங்களில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதுபற்றிய முன்னுரையில்,“மாமல்லபுரத்தில் கடலில் நடந்து நான், கடலில் தொலைந்து போனேன் என்று கூறியுள்ளார்.

’கடலில் தொலைந்து போனேன்’.. பிரதமர் மோடியின் கடலோர கவிதை!! இது புதுசு!!

Mamallapuram Summit: பிரதமர் மோடி, கடற்கரையில் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களையும் வெளியிட்டார்.

New Delhi:

சீன அதிபர் ஜின்பிங் உடனான சந்திப்பிற்காக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, மகாபலிபுரம் கடற்கரையில் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, தான் கடலுடன் மேற்கொண்ட உரையாடலை இந்தி மொழியில் கவிதையாக எழுதியுள்ளார். 

இதுதொடர்பான தனது கவிதையை இன்று சமூகவலைதளங்களில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதுபற்றிய முன்னுரையில்,“மாமல்லபுரத்தில் கடலில் நடந்து நான், கடலில் தொலைந்து போனேன். இந்த உரையாடல் என் ஆத்ம உலகம். இதை உங்களோடு வார்த்தைகளில் பகிர்ந்து கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

8 பத்திகளில் எழுதி, அவரால் கையெழுத்திடப்பட்ட அந்த கவிதையில், சூரியனுடனும், அலைகளுடனுமான கடலின் உறவையும், அதன் வலியையும் உணர்வுப்பூர்வமாக விவரித்துள்ளார்.


சீன அதிபர் ஸீ ஜின்பிங் உடனான இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டிற்காக 2 நாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, கடலோர பகுதியான மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். இந்த சந்திப்பின் போது, இரு நாட்டு தலைவர்களும் தீவிரவாதம், இருநாட்டு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதனிடையே, மாமல்லபுரத்தில் தங்கியிருந்த மோடி, அதிகாலை நடைபயிற்சிக்காக கடற்கரை சென்றார். இதுதொடர்பான புகைப்படங்களையும் தனது ட்வீட்டர் பதிவில் பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார். 

கரையோரத்தில் இருந்த குப்பைகளை அகற்றும் சுமார் 3 நிமிட வீடியோவை வெளியிட்ட பிரதமர் மோடி, கடற்கரையோரத்தில் உடற்பயிற்சி, நடைபயிற்சியை தவிர்த்து ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் முன்னெடுப்பாகவும் அதனை பயன்படுத்தினார். 

எழுத்தைத் தவிர்த்து, பிரதமர் மோடி ஒரு தீவிர யோகா ஆர்வலராகவும் அறியப்படுகிறார். அவரது ஓய்வு நேரத்தில் சவாலான ஆசனங்களையும் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 
 

More News