இந்தியா கொண்டுவரப்படுகிறார் விஜய் மல்லையா - லண்டன் நீதிமன்றம் அனுமதி

விஜய் மல்லையா மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக லண்டன் நீதிமன்ற நீதிபதி எம்மா அர்பத்நாட் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

Vijay Mallya has offered to pay back 100 per cent of the principal he owes Indian banks.


London: 

ரூ. 9 ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில், லண்டன் தப்பிச் சென்றிருக்கும் மல்லையா இந்திய கொண்டுவரப்பட உள்ளார். இதுதொடர்பாக நடந்து வந்த வழக்கில், மல்லையாவை இந்தியா கொண்டு செல்வதற்கு லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

இதையடுத்து அவர் விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிங் ஃபிஷர் நிறுவனத்தை நடத்தி வந்த தொழில் அதிபர் மல்லையா, அதன் வளர்ச்சிக்காக பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரைக்கும் கடன் வாங்கியிருந்தார்.

இதனை திருப்பிச் செலுத்தாத நிலையில் அவர் கடந்த 2016-ல் இந்தியாவை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சட்ட சிக்கல்கள் இருந்ததால், நீதிமன்றம் மூலமாக இந்த விவகாரத்தை மத்திய அரசு அணுகியது.

லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் மல்லையா மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதாகவும், எனவே அவரை இந்தியாவுக்கு கொண்டு செல்லலாம் என லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

இதையடுத்து அவர் விரைவில் இந்தியா கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், மல்லையாவை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வந்து வழக்கை விரைவில் முடிப்போம். வழக்கை முடிப்பதற்கான வலிமை சிபிஐக்கு இருக்கிறது என்று தெரிவித்தனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................