ஹாட்டா இருக்கீங்க…! உங்க இடுப்புல ஆம்லேட் போடலாமா : மல்லிகா ஷெராவத்துக்கு வந்த சோதனை

ஒருமுறை ஒரு படத்தில் பாடலை படமாக்கிக் கொண்டிருந்தோம். தயாரிப்பாளர் சினிமா துறைக்கு மிகவும் புதியவர் என்று நினைக்கிறேன். ‘மல்லிகா ஹாட் & செக்ஸியா இருக்காங்க… அதை வெளிக்காட்டுற மாதிரி மல்லிகாவின் தொப்புளில் ஆம்லேட் போட வேண்டும் என்று நடன இயக்குநருக்கு ஆலோசனை ஒன்றினை கூறினார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஹாட்டா இருக்கீங்க…! உங்க இடுப்புல ஆம்லேட் போடலாமா : மல்லிகா ஷெராவத்துக்கு வந்த சோதனை

நிகழ்ச்சியில் பேசிய மல்லிகா ஷெராவத்(courtesy sonyliv)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. தயாரிப்பாளருக்கு அறிவு என்பதே இல்லை
  2. நடன இயக்குநர் மூலமாக இதைக் கேட்டு விட்டார்.
  3. ஹாட்னஸ்ஸை வெளிக்காட்டுற விதமா இடுப்புல ஆம்லேட் போடலாமா....

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் சமீபத்தில் தன்னுடைய வெளிப்படையான பேச்சு காரணமாக பல படங்களை இழந்து விட்டதாக தெரிவித்தார். எனக்கு பதிலாக நடிகர்கள் தங்களுடைய பெண் தோழிகளை நடிக்க வைத்ததாகவும் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். 

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது,  தயாரிப்பாளர்கள் ஒரு படத்தில் எந்தவித முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவரகள் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக ஒரு சம்பவத்தை அவர் விவரித்தார். “ ஒருமுறை ஒரு படத்தில் பாடலை படமாக்கிக் கொண்டிருந்தோம். தயாரிப்பாளர் சினிமா துறைக்கு மிகவும் புதியவர் என்று நினைக்கிறேன். ‘மல்லிகா ஹாட் & செக்ஸியா இருக்காங்க… அதை வெளிக்காட்டுற மாதிரி மல்லிகாவின் தொப்புளில் ஆம்லேட் போட வேண்டும் என்று நடன இயக்குநருக்கு ஆலோசனை ஒன்றினை கூறினார். 

நடன இயக்குநரும் இதை வந்து என்னிடம் கூறினார்” என்று தெரிவித்தார். “நீங்கள் அதை செய்ய ஒப்புக் கொண்டீர்களா…?” என்று கேட்டதற்கு “இல்லை நான் அதை செய்யவில்லை” என்று கூறி மல்லிகா ஷெராவத் சிரித்தபடி கூறினார். 

சமீபத்தில் பிடிஐ செய்தி நிறுவனத்திடம்  தான் மிகவும் உறுதியாக சில கருத்துகளை உடையவள் என்பதால் எனக்கு பல படங்களை இழந்து விட்டதாகவும், நடிகர்கள் தங்களுடைய தோழிகளை நடிக்க வைத்ததாகவும் தெரிவித்தார். ஹீரோக்கள் பலரும் “அவள் நடிக்க வேண்டாம். அவள் நிறைய பேசுகிறாள்” என்று என்னை புறக்கணித்துள்ளனர். நான் குறைந்தது 20-30 திரைப்படங்களை பட்டியலிட முடியும். அதனால் நான் எதையும் இழந்துவிடவில்லை.  இப்போதை அதை திரும்பி பார்க்கும்போது அவர்கள் அனைவரும் முட்டாள்களாகத்தான் தெரிகிறார்கள் என்று தெரிவித்தார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................