ரஷ்ய அழகியுடன் திருமணமா? - பதவி விலகிய மலேசிய அரசர்

’மலேசியாவின் 15 வது அரசர் தனது பதவியை ஜனவரி 6 ஆம் தேதி ராஜினாமா செய்துள்ளார்’ என்ற அறிக்கையை மலேசியா அரண்மனை வெளியிட்டுள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
ரஷ்ய அழகியுடன் திருமணமா? - பதவி விலகிய மலேசிய அரசர்

இந்நிலையில், அரசர் சுல்தான் முகமத் V, ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் மிஸ்.மாஸ்கோ அழகி ஒருத்தியை திருமணம் செய்துள்ளதாக செய்திகள் பரவியது


Kuala Lumpur: 

ஹைலைட்ஸ்

  1. மலேசியாவின் 15 வது அரசர் சுல்தான் முகமத் V
  2. கடந்த நவம்பர் மாதம் மருத்துவ சிகிட்சைக்காக விடுமுறை எடுத்தார்.
  3. விடுதலை பெற்ற பின் அரசர் ஒருவர் தனது பதவியை துறப்பது இதுவே முதல் முறை

ரஷ்ய அழகியை மலேசிய அரசர் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி சில மாதங்களாக பரவி வந்தது. இதனை உறுதி செய்யும் விதமாக தனது அரசர் பதவியில் இருந்து அவர் விலகியுள்ளார். இதனை அந்த நாட்டின் அரண்மனை உறுதி செய்துள்ளது.

1957 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் அரசிடம் இருந்து விடுதலை பெற்றது மலேசியா. அன்று முதல், அரசர் ஒருவர் தனது பதவியை துறப்பது இதுவே முதல் முறையாகும்.

'மலேசியாவின் 15 வது அரசர் தனது பதவியை ஜனவரி 6 ஆம் தேதி ராஜினாமா செய்துள்ளார்' என்ற அறிக்கையை மலேசியா அரண்மனை வெளியிட்டுள்ளது. அரசரின் ராஜினாமாவிற்கான காரணத்தை அந்த அறிக்கையில் தெரிவிக்கவில்லை.

டிசம்பர் 2016 இல் அரசராக பதவி ஏற்ற சுல்தான் முகமத் வி, கடந்த நவம்பர் மாதம் மருத்துவ சிகிச்சைக்காக விடுமுறை எடுத்தார். இந்நிலையில், அரசர் சுல்தான் முகமத் வி, ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் மிஸ்.மாஸ்கோ அழகி ஒருவரைத் திருமணம் செய்துள்ளதாக செய்திகள் பரவியது. இச்செய்திக்கு அரசர் பரம்பரை விளக்கம் ஒன்றும் அளிக்கவில்லை.

மலேசிய அரசானது அரசியலமைப்பு கொண்டு அரசர்களால் ஆளப்படுவதாகும். அங்கு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை அரசர்கள் மாற்றப்படுவார்கள். ஒன்பது மாநிலங்களை கொண்டது மலேசிய அரசு. இவர்களுக்கு எல்லாம் தலைமை வகிப்பது இஸ்லாமிய சமுதாயமாகும்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................