This Article is From Apr 28, 2019

பிரபல தனியார் நிறுவனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தோனி!

2009 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அமரப்பல்லி விளம்பரத் தூதராக தோனி செயல்பட்டு வந்தார்

பிரபல தனியார் நிறுவனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தோனி!

சமீப காலமாக அமரப்பல்லி குழுமம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது (கோப்புப் படம்)

New Delhi:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, அமரப்பல்லி குழும நிறுவனத்திடமிருந்து தனக்கு வர வேண்டிய சொத்தை பெற்றுத் தருமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இது குறித்து அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ராஞ்சியில் இருக்கும் அமரப்பல்லி சஃபாரி திட்டத்தில் பென்ட்ஹவுஸ் வீட்டை நான் முன்பதிவு செய்திருந்தேன். அதேபோல அமரப்பல்லி நிறுவனத்தின் அந்த திட்டத்துக்கு நான் விளம்பரத் தூதராகவும் இருந்தேன்.

இந்நிலையில் எனக்கு அமரப்பல்லி நிறுவனம் தரப்பிலிருந்து விளம்பரத் தூதருக்கான பணமும் தரப்படவில்லை. பென்ட்ஹவுஸும் ஒப்படைக்கப்படவில்லை' என்று கூறியுள்ளார்.

கடந்த மாதம், தனக்கு அமரப்பல்லி குழுமம் 40 கோடி ரூபாய் பணம் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தோனி, மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

2009 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அமரப்பல்லி விளம்பரத் தூதராக தோனி செயல்பட்டு வந்தார். ஆனால், சமீப காலமாக அமரப்பல்லி குழுமம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 46,000 பேர், தாங்கள் பணம் கொடுத்த பின்னரும் அமரப்பல்லி குழுமத்தால் வீடு ஒதுக்கித் தரப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 

அமரப்பல்லி தொடர்பான வழக்கில் இதுவரை நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. முன்னதாக, அமரப்பல்லி குழுமத்துக்கு இருக்கும் சொத்துகளின் ஆவணங்களை சமர்பிக்கச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கடந்த ஜனவரி 25 ஆம் தேதி நீதிமன்றம், நிலுவையில் இருக்கும் அமரப்பல்லி குழுமத்தின் இரண்டு கட்டுமானத் திட்டங்களை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டது. 

அதைத் தொடர்ந்து பிப்ரவரி 28 ஆம் தேதி, அமரப்பல்லி சி.எம்.டி அனில் ஷர்மா, இயக்குநர்கள் சிவ் தீவானி, அஜய் குமார் ஆகியோரை போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பியது. 

.