This Article is From Jan 30, 2019

காந்தியின் நினைவு நாள்: உப்பு சத்தியாகிரக நினைவிடம் திறக்கும் மோடி

காந்தியுடன் இந்த உப்புச் சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்ட 80 பேரின் சிலை இந்த நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

காந்தியின் நினைவு நாள்: உப்பு சத்தியாகிரக நினைவிடம் திறக்கும் மோடி

மார்ச் 12,1930 யில் தொடங்கிய இந்த உப்புச் சத்தியகிரகம், ஏப்ரல் 6,1930 யில் முடிந்தது

New Delhi:

ஜனவரி 30 ஆம் தேதியான இன்று, மகாத்மா காந்தியின் நினைவு நாளாகும். காந்திஜியை நினைவு படுத்தும் விதமாக, உப்புச் சத்தியாகிரக நினைவிடத்தை பிரதமர் மோடி அவர்கள் இன்று திறந்து வைக்கிறார்.

‘காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, தண்டி செல்லும் பிரதமர் மோடி, அங்கு உப்புச் சத்தியாகிரக நினைவிடத்தை திறந்து வைத்து அதனை நாட்டிற்காக அர்ப்பணிப்பார்' என அறிக்கை வெளியிடப்பட்டது.

காந்தியுடன் இந்த உப்புச் சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்ட 80 பேரின் சிலை இந்த நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மார்ச் 12,1930 யில் தொடங்கிய இந்த உப்புச் சத்தியகிரகம், ஏப்ரல் 6,1930 யில் முடிந்தது. இந்த 24 நாட்களை குறிக்கும் விதமாக, இந்த நினைவிடத்தில் 24 சுவரோவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது இந்த உப்புச் சத்தியாகிரகம். உப்பிற்கு விதிக்கப்பட்ட வரிக்கு எதிராகவும் உப்பை விற்க இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராகவும் உப்பு சத்தியாகிரகம் நடத்தப்பட்டது.

80 பேர் உடன் துவங்கிய இந்த உப்புச் சத்தியாகிரகம், சபர்மதியில் இருந்து தண்டி வரையிலான 390 கி.மீ தூரம் நடைப்பெற்றது. தண்டி சென்றடையும் போது, மொத்தம் 50,000 பேர் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

(With inputs from PTI)

.