This Article is From Dec 12, 2019

மகாராஷ்டிரா அரசில் சிவசேனாவுக்கு உள்துறை, NCP-க்கு நிதி, காங்.க்கு வருவாய்த்துறை!!

59 வயதாகும் உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் 28-ம்தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். மும்பை சிவாஜி பார்க்கில் நடைபெற்ற இந்த விழாவில் கூட்டணி கட்சியான காங்கிரசின் சோனியா, ராகுல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மகாராஷ்டிரா அரசில் சிவசேனாவுக்கு உள்துறை, NCP-க்கு நிதி, காங்.க்கு வருவாய்த்துறை!!

நவம்பர் 18-ம்தேதி மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுக் கொண்டார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில் துறைகள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி உள்துறை சிவசேனாவுக்கும், நிதித்துறை தேசியவாத காங்கிரசுக்கும், வருவாய்த்துறை காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

முதல்வரான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, உள்துறை, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை உள்ளிட்டவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். 

நிதித்துறையும், விட்டு வசதித்துறையும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தரப்பட்டுள்ளது. வருவாய்த்துறை காங்கிரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. இதில் முதல்வர் பதவி தர மறுக்கப்பட்டதால் பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியது. அக்கட்சியின் மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இதன் மூலம் 30 ஆண்டுகளாக இருந்த சிவசேனா - பாஜக கூட்டணி முடிவுக்கு வந்தது. இதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மகாராஷ்டிர முதல்வராக சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுக் கொண்டார். 

.