6 அமைச்சர்களுடன் மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே!!

மகாராஷ்டிராவில் மொத்தம் 43 அமைச்சர் பொறுப்புகள் உள்ளன. இவற்றில் 15 சிவசேனாவுக்கும், 16 தேசியவாத காங்கிரசுக்கும், 12 காங்கிரசுக்கும் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், எந்தக் கட்சிக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை. 

பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை சோனியா காந்தி தவிர்த்திருக்கிறார்.

ஹைலைட்ஸ்

  • முதன் முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்கிறார் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே
  • சிவாஜி பூங்காவில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது
  • இரவு 8 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Mumbai:

அமைச்சர்கள் 6 பேருடன் மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்றார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரேவை தவிர்த்து சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜெயந்த் பாட்டீல், சாகன் புஜ்பாலும், காங்கிரஸ் கட்சியின் பாலா சாஹேம் தோரட் மற்றும் நிதின் ராவத் ஆகியோரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதன் பின்னர் இரவு 8 மணிக்கு புதிதாக அமைகின்ற மகாராஷ்டிர அமைச்சரவையின் கூட்டம் நடைபெறவுள்ளது. 

எதிர் அணியில் இருந்து திரும்பியுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இன்றைக்கு அவர் பதவியேற்கவில்லை.

மகாராஷ்டிர அமைச்சரவையில் சபாநாயகர் பொறுப்பு காங்கிரசுக்கு வழங்கப்படவுள்ளது. முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவானுக்கு இந்தப் பொறுப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மகாராஷ்டிராவில் மொத்தம் 43 அமைச்சர் பொறுப்புகள் உள்ளன. இவற்றில் 15 சிவசேனாவுக்கும், 16 தேசியவாத காங்கிரசுக்கும், 12 காங்கிரசுக்கும் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், எந்தக் கட்சிக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை. 

More News