கோயிலுக்கு அழைத்துச் சென்று மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொன்ற கணவன் கைது

கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து முடித்தபின் மனைவி கவிதா செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்த போது மலையிலிருந்து தள்ளிவிட்டு கொன்றுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கோயிலுக்கு அழைத்துச் சென்று மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொன்ற கணவன் கைது

The accused was overpowered by other pilgrims who handed him over to police (Representational)


Nashik: 

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில்  30வயது இளைஞர் ஒருவர் தன் மனைவியுடன் கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு அங்கிருந்த மலையிலிருந்து தன் மனைவியை கீழே தள்ளி கொலை செய்துள்ளார். 

காவல்துறையினர் கொடுத்த தகவலில், பாபுலால் கடே என்ற நபர் ஞாயிறு அன்று தன் மனைவி கவிதாவை (22) நந்தூரி  மலையில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார். மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த இந்த தம்பதியினர், கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து முடித்தபின் மனைவி கவிதா செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்த போது மலையிலிருந்து தள்ளிவிட்டு கொன்றுள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றவாளியை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கவிதாவின் உடல் பள்ளத்தாக்கிலிருந்து மீட்கபட்டுள்ளது. கொலைக்கான காரணம் என்ன என்பதற்கான விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................