This Article is From May 17, 2020

லாக்டவுனை மே 31 வரை நீட்டிக்கிறது மகாராஷ்டிரா மாநிலம்!!

கடந்த வியாழக்கிழமை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரேவுடனான கலந்துரையாடலுக்கு பிறகு, “இந்த ஊரடங்கு மும்பை மற்றும் பிற முக்கியப் பகுதிகளில் நீட்டிக்கப்படும்” என அம்மாநில தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

லாக்டவுனை மே 31 வரை நீட்டிக்கிறது மகாராஷ்டிரா மாநிலம்!!

மும்பைக்கு சிறப்பு பொருளாதார நிதி தொகுப்பினை வழங்க அம்மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.

Mumbai:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 90 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், மகாராஷ்டிரா அரசு தனது மாநிலத்தில் மே 31 வரை ஊரடங்கினை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், தொற்று அதிகம் இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்தும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்று எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளது. இம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 1,606 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஒட்டு மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மும்பை நகரத்தினை பொறுத்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 884 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மும்பையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 18,555 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாத இறுதிக்குள் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50 ஆயிரத்தினை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மும்பைக்கு சிறப்பு பொருளாதார நிதி தொகுப்பினை வழங்க அம்மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.

.