மகாராஷ்டிர தேர்தல் : பாஜக - சிவசேனா இடையே தொகுதிப்பங்கீடு நிறைவு!!

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பாஜக - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. சிவசேனா 124 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற 164 தொகுதிகள் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர தேர்தல் : பாஜக - சிவசேனா இடையே தொகுதிப்பங்கீடு நிறைவு!!

பத்திரிகையாளர் சந்திப்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ்.

Mumbai:

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா இடையே தொகுதிப்பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. இந்த தேர்தலில் சிவசேனா 124 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற 164 தொகுதிகள் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக பல தகவல்கள் வெளி வந்திருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக இன்று பத்திகையளர் சந்திப்பில் இரு கட்சிகளும் அறிவித்தன. இந்த சந்திப்பில் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் ஆகியோர் இருந்தனர். 

இதேபோன்று பாஜக தரப்பில் 4-வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அக்டோபர் 21-ம்தேதி மகாராஷ்டிரா தேர்தலை சந்திக்கிறது. வாக்குகள் 24-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகிறன. 

பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ், 'பாஜக - சிவேசனா இடையே பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் 'இந்துத்துவா' என்ற அடிப்படையில் இரு கட்சிகளும் ஒன்றுபடுகின்றன. இந்த சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் வெற்றியை எங்கள் கூட்டணி பெறும்' என்றார். 

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறும்போது, 'சகோதரர்கள் மத்தியில் யார் பெரியவன், யார் சிறியவன் என்ற வேறுபாடுகள் ஏதும் கிடையாது. இருவருக்கும் இடையே உள்ள உறவுதான் முக்கியம்' என்று கூறினார். 

சில வாரங்களுக்கு முன்பு பாஜகவும், சிவசேனாவும் 50 : 50 இடங்களில் போட்டியிடும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்று இறுதி முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. எதிர்த்தரப்பில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ளது. 
 

More News