மருத்துவமனையிலிருந்து வீல் சேரில் வந்து வாக்களித்த 102 வயது முதியவர்! குவியும் பாராட்டு!!

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. வாக்குப்பதிவு இன்று முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடைபெற்று அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மருத்துவமனையிலிருந்து வீல் சேரில் வந்து வாக்களித்த 102 வயது முதியவர்! குவியும் பாராட்டு!!

வீல் சேருடன் ஹாஜி இப்ராகிம் சலீம்.


Pune, Maharashtra: 

மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்த 102 வயதாகும் முதியவர் ஒருவர், வீல் சேரில் வந்து தனது வாக்கை மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பதிவு செய்துள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

மகாராஷ்டிர மாநிலம் பூனேவின் லோகான் தொகுதியைச் சேர்ந்தவர் ஹாஜி இப்ராகிம் சலீம். 102 வயதாகும் சலீமின் குடும்பம் மிகவும் பெரியதாகும். சுமார் 150 பேர் அவரது குடும்பத்தில் உள்ளனர். 

வயது முதிர்வால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று தேர்தல் என்றதும், உடல்நலனையும் பொருட்படுத்தாது வீல்சேரில் வந்து அவர் தனது வாக்கை பதிவு செய்தார். 

இதுகுறித்து, ஏ.என்.ஐ. செய்தி நிறுவத்திற்கு சலீம் அளித்துள்ள பேட்டியில், 'இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து நான் வாக்களித்து வருகிறேன்.  எண்ணற்ற மாற்றங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. கடந்த 4 நாட்களுக்கு முன்பாக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். 

இன்று வலியையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்க வந்துள்ளேன். ஒவ்வொரு வாக்காளரும் வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களிக்க வேண்டும். பிரதமர் மோடி நன்றாக செயல்படுகிறார். எனது வாக்கு அவருக்குத்தான்.' என்று கூறினார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................