மகாராஷ்டிரா பாஜக நிர்வாகக் கூட்டத்தில் நிதின்கட்கரி, பங்கஜா முண்டே ஆகியோர் பங்கேற்கவில்லை

பங்காஜா முண்டே தனது மகனின் கல்லூரி சேர்க்கைக்காக வெளிநாடு சென்று கொண்டிருந்ததால் கலந்து கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மகாராஷ்டிரா பாஜக நிர்வாகக் கூட்டத்தில் நிதின்கட்கரி, பங்கஜா முண்டே ஆகியோர் பங்கேற்கவில்லை

சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகவே இந்த மாநில நிர்வாகக் கூட்டம் நடத்தப்படுகிறது. (File Photo)


Mumbai: 

பாஜகவின் மாநில பிரிவின் நிர்வாகக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில பிரிவு தலைவர் சந்திரகாந்த் பாட்டில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும் இந்த சந்திப்பிற்கு முங்கந்திவார் கலந்து கொண்டார் என பாட்டீல் கூறினார்.

அரசியல் தீர்மானத்திற்காக அவர் தன்னை வருத்திக் கொண்டிருக்கக் கூடாது என்று அவர் கூறினார்.

பங்கஜா முண்டே தனது மகனின் கல்லூரி சேர்க்கைக்காக வெளிநாடு சென்று கொண்டிருந்ததால் கலந்து கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் முக்கியமான கூட்டத்தில் பங்கேற்க நிதின்கட்கரி சென்று விட்டதாகத் தெரிகிறது. 

இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு ஆயத்தமாகவே இந்த மாநில நிர்வாகக் கூட்டம் நடத்தப்படுகிறது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................