This Article is From Oct 23, 2019

''சிவசேனா ஆதரவு இல்லாமல் பாஜகவால் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முடியாது'' - சஞ்சய் ராவத்!!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றி பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

''சிவசேனா ஆதரவு இல்லாமல் பாஜகவால் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முடியாது'' - சஞ்சய் ராவத்!!

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்.

Mumbai:

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில், தங்களின் ஆதரவு இல்லாமல் என்று சிவசேனாவின் முக்கிய தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையொட்டி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து சிவசேனா கட்சியின் முக்கியத் தலைவர் சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

சிவசேனாவின் ஆதரவு இல்லாமல் பாஜகவால் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முடியாது. மொத்தம் போட்டியிட்ட 124 தொகுதிகளில் சிவசேனா 100 தொகுதிக்கும் மேல் வெற்றி பெறும். 

மெஜாரிட்டிக்கு 145 இடங்கள் தேவை. எனவே நாங்கள் 4-5 சீட்டுகளில் வெற்றி பெற்றாலும்கூட எங்களது ஆதரவு இல்லாமல் பாஜக ஆட்சியமைக்க முடியாது. தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி குறைந்தது 200 இடங்களையாவது கைப்பற்றும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த தேர்தலில் பாஜக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த 2014 சட்டமன்ற தேர்தலின்போது, கூட்டணியில்லாமல் சிவசேனா 62 இடங்களைக் கைப்பற்றியது. இந்த தேர்தலில் 122 இடங்களில் வெற்ற பெற்ற பாஜக - சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தியது. 

.