மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகராக நானா படோல் ஒரு மனதாக தேர்வு!

சகோலி தொகுதி எம்.எல்.ஏவான நானா படோல், நான்கு முறை தேர்வானார். காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், கடந்த 2014 லோக்சபா தேர்தலின் போது, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

சகோலி தொகுதி எம்.எல்.ஏவான நானா படோல், நான்கு முறை தேர்வானார்.

Mumbai:


மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா படோல் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மகாராஷ்டிராவில் சட்டசபை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற இருந்தது. இதில் காங்கிரஸ் சார்பில் நானா படோல் முன்னிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து பாஜகவின் கிஷன் கதோர் நிறுத்தப்பட்டார். பின்னர் கடைசி நேரத்தில் அவர் தனது மனுவை திரும்ப பெற்று கொண்டதால், நானா படோல் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக, மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு வெற்றி பெற்றது. பெரும்பான்மை பெறுவதற்கு 145 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், உத்தவ் அரசுக்கு ஆதரவாக 169 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 

பாஜக எம்.எல்.ஏக்கள் தேவேந்திர பட்னாவீஸ் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். கவர்னர் நியமித்த இடைக்கால சபாநாயகருக்கு பதிலாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திலீப் வால்ஸ் பாட்டீல் சபாநாயகராக செயல்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறினர். 

மாநிலத்தில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடத்துகின்றன. இந்த கட்சிகளில் மொத்தம் 154 உறுப்பினர்கள் உள்ளார்கள். அவர்களைத் தவிர்த்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சிலரும், பகுஜன் விகாஸ் அகாதி கட்சியும் உத்தவ் தாக்கரே அரசை ஆதரித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளது. 

காவி வண்ண தலைப்பாகையை இன்று உத்தவ் தாக்கரேவும், அவரது சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் உத்தவ் பேசுகையில், 'என் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி. மகாராஷ்டிர மக்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடைய ஆசிர்வாதம் இல்லாமல் என்னால் பணியாற்ற முடியாது.' என்றார். 

இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிராவில் சட்டசபை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற இருந்தது. அவரை எதிர்த்து பாஜகவின் கிஷன் கதோர் நிறுத்தப்பட்டார். பின்னர் கடைசி நேரத்தில் அவர் தனது மனுவை திரும்ப பெற்று கொண்டதால், நானா படோல் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

சகோலி தொகுதி எம்.எல்.ஏவான நானா படோல், நான்கு முறை எங்கிருந்து தேர்வானார். காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், கடந்த 2014 லோக்சபா தேர்தலின் போது, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மக்களவை தேர்தலில் தேசியவாத காங்கிரசின் பிரபுல் படேலை தோற்கடித்தார். 2017ல் கருத்து வேறுபாடு காரணமாக தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.
 

More News