This Article is From Jan 30, 2020

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை! அறிகுறி உள்ளவர்களுக்கு மதுரையில் தனி வார்டு அமைப்பு!!

மதுரை அரசு மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை நிபுணர் தலைமையில் 24 மணி நேரமும் செயலாற்றும் 2 மருதுதுவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை! அறிகுறி உள்ளவர்களுக்கு மதுரையில் தனி வார்டு அமைப்பு!!

மதுரையில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Madurai:

கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் வருவோருக்கு சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனையில் 'கொரோனா வைரஸ்' என்ற வார்டு தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு ரிப்பன் வெட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் சங்குமணி அளித்த பேட்டியில், 'கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரைக்கும் யாரும் இங்கு சிகிச்சைக்காக வரவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சிறப்பு வார்டை திறந்துள்ளோம்.

இந்த வார்டில் 6-8 படுக்கைகள் தனி அறைகளுடன் உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அதனை கண்டறியும் வகையில் NIV (Non Invisble Vendelator) வசதிகள் செய்யப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார். 

மதுரை அரசு மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை நிபுணர் தலைமையில் 24 மணி நேரமும் செயலாற்றும் 2 மருதுதுவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வார்டு ரிப்பன் வெட்டப்பட்டு குத்து விளக்கேற்றி சாக்லேட்டுகள் வழங்கி திறக்கப்பட்டது. 

பொதுவாக சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது இந்த கொரோனா வைரஸ். 

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள உஹான் நகரில்தான் இந்த வைரஸ் முதன் முறையாக மிருகங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130-யை தாண்டியுள்ளது. அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த கொரோனா வைரஸ் இதற்கு முன்பாக மனிதர்களின் உடலில் கண்டறியப்பட்டதில்லை. மூச்சு விடுவதில் சிரமம், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவை இதன் பாதிப்பின் அறிகுறிகளாகும்.
 
.