சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா செய்ய முடிவு என தகவல்! (Tahilramani)

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றி நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா செய்ய முடிவு என தகவல்! (Tahilramani)

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தஹில் ரமணி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


Chennai: 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இரண்டு நாட்கள் முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வந்த நிலையில் அவர் ராஜினாமா செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தஹில் ரமனி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்தியாவின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான இவர், தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் நீதிபதிகளில் ஒருவராவார். 

இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய போது 2017ஆம் ஆண்டு பில்கிஸ் பானோ பாலியல் (Bilkis Bano) வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

இந்நிலையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜீயம் குழு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமணியை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாகவும், தற்போது மேகலாய மாநில தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற முடிவு செய்த உச்ச நீதிமன்ற கொலிஜீயம் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது. 

இதனையடுத்து, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு நியமிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தஹில் ரமாணி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை எதிர்த்து ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

With inputs from PTIசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................