This Article is From Feb 13, 2019

சட்டவிரோத பார்களுக்கு மூடுவிழா- அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்!

தமிழக அளவில் இயங்கி வரும் சட்டத்துக்கு விரோதமான பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.  

சட்டவிரோத பார்களுக்கு மூடுவிழா- அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்!

இது குறித்து வரும் 20 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது

ஹைலைட்ஸ்

  • கோவையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் இது குறித்த வழக்கை தொடர்ந்தார்
  • இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
  • யாரும் எதிர்பாராத விதத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

தமிழக அளவில் இயங்கி வரும் சட்டத்துக்கு விரோதமான பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.  இது குறித்து வரும் 20 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 

கோவையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில், ‘தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், பார் நடத்துவதற்கான உரிம லைசென்ஸ் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு வித முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றது. அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

அப்போது அரசு சார்பில், ‘சட்ட விரோதமாக இயங்கி வரும் பார்களுக்கு எதிராக இதுவரை மாநில அளவில் 3,326 எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது குறித்து விசாரித்து வருகிறோம்' என்று கூறப்பட்டது. 

இதையடுத்து நீதிமன்றம், ‘தமிழக அளவில் சட்ட விரோதமாக இயங்கி வரும் அனைத்து பார்களையும் மூட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து 20 ஆம் தேதி, அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளது. 

.