ஓர் ஆண்டுக்கும் மேலாக 6 பேர் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம்

அந்த சிறுமியின் பள்ளி நண்பனும் காண்ட்ராக்டரின் சொந்தக்கார பையனுமான 16 வயது மைனர் சிறுவனும் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

ஓர் ஆண்டுக்கும் மேலாக 6 பேர் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம்

ஊரில் தன்னுடைய தங்கை மற்றும் அப்பாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். (Representational)

ஹைலைட்ஸ்

  • 50வயது பெரியவரும் அவரது மகன், மற்றும் 4 பேர் இணைந்துள்ளனர்.
  • சிறுமி தந்தையிடம் கூறி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
  • 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Bhopal:

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 16 வயது சிறுமியை 6 பேர் இணைந்து கிட்டத்தட்ட 16 மாதங்கள் வன்புணர்வு செய்துள்ளனர். ஆறு பேரில் 50 வயது சமையல் காண்ட்ராக்டர், அவரது மகன் (சட்டம் படிக்கும் மாணவன் மற்றும் 4 பேர் இணைந்து இதை செய்துள்ளனர். ஆறு பேரில்  16 வயது மைனர் சிறுவனும் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

மாச் 2018 ஆம் ஆண்டு 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி தாயார் இறந்து விட்ட காரணத்தினால் படிப்பை பாதியில் விட்டு ஊருக்கு வந்துள்ளார்.

ஊரில் தன்னுடைய தங்கை மற்றும் அப்பாவுடன் வாழ்ந்து வந்துள்ளார்.அப்பா  இரவு நேர காவலராக பணிபுரிந்து வருகிறார்.

அப்பா இல்லாத நேரத்தில்  அந்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் சமையல் கான்ட்ராக்டர் தன்னுடைய வீட்டுக்கு வந்து தன்குழந்தைகளை கவனித்துக் கொண்டால் சம்பளம் தருவதாக அழைத்துச் சென்றுள்ளார்.

அதன்பின் பார்ன் வீடியோக்களை பார்க்க கூறி வற்புறுத்தி பல முறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அவருடைய மகன் 23 வயது சட்ட மாணவனும் பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கியுள்ளார். தனக்கு ஒத்துழைக்கா விட்டால் வெளியில் சொல்லி விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். 

அந்த சிறுமியின் பள்ளி நண்பனும் காண்ட்ராக்டரின் சொந்தக்கார பையனுமான 16 வயது மைனர் சிறுவனும் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

அந்தப் பென் தன் தந்தையிடம் கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். 

“50 வயது சமையல் காண்ட் ராக்டர், அவரது மகன் சட்ட மாணவன், மற்றும் உறவினர், 16 வயது மற்றும் 18 வயது இளைஞரும்” கைது செய்யப்பட்டுள்ளனர் என்று  காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 

மத்திய பிரதேச சிறுவர் பாதுகாப்பு ஆணையங்கள் சமீபத்தில் சட்ட சபையில் தாக்கல் தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஆண்டில் மாநிலத்தில் 6,794க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளன. சிறுவர் பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் மோசமான நகரங்களில் ஒன்றாக உள்ளது. 

More News