ம.பி.-யில் கொடூரம் : சகோதரர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட சிறுமி.

போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்திருக்கின்றன. சிறுமியின் மாமாவும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ம.பி.-யில் கொடூரம் : சகோதரர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட சிறுமி.

விசாரணை நடத்தும் மத்திய பிரதேச போலீசார்.


Sagar, Madhya Pradesh: 

ஹைலைட்ஸ்

  1. போலீசாருக்கு சிறுமியின் மாமா தவறான தகவல்களை அளித்துள்ளார்
  2. குற்றச் செயலில் சகோதரர்களும் ஈடுபட்டதாக போலீஸ் தகவல்
  3. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வயலில் சிறுமியின் சடலம் மீட்பு

மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமி ஒருவர் தனது சொந்த சகோதரர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 12 வயது சிறுமி ஒருவர் மார்ச் 14-ம் தேதி காணாமல் போனார்.  இதுகுறித்து அவரது  பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது சம்பந்தமாக சிறுமியின் மாமாவிடம் போலீசார் முதலில் விசாரணை நடத்தினர். அப்போது, போலீசாரை குழப்புவதற்காக தவறான  தகவல்களை  அளித்தார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்  சிறுமியின் மாமா பொய் சொல்வதை போலீசார் அறிந்து கொண்டனர்.  

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாரையே அதிர்ச்சி கொள்ள வைக்கும் தகவல்கள் வெளிவந்தன. இதன்படி சிறுமியை அவரது சகோதரர்கள் கடத்திச் சென்று அவரது மாமாவிடம் ஒப்படைத்துள்ளனர். இதன்பின்னர் மாமாவும், சகோதரர்களும் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்திருக்கின்றனர்.

கடைசியில் அரிவாள் போன்ற ஆயுதத்தை பயன்படுத்தி சிறுமியின் தலையை  அவர்கள் வெட்டியுள்ளனர். சிறுமியின் சடலம்  வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். என்ன காரணத்திற்காக  இந்த பலாத்காரம் மற்றும் கொலை நடந்திருப்பது தெரியவரவில்லை.  இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................