மின் கம்பியில் சர்க்கஸ் செய்து ரயிலை ஒரு மணி நேரத்திற்கு நிறுத்திய குறும்புக்கார இளைஞர்!!

அதிகாரிகள் குறும்புக்கார இளைஞருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மின் கம்பியில் இருந்து கீழே இறக்கினார்கள். இதன்பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் புறப்பட்டு சென்றது.

மின் கம்பியில் சர்க்கஸ் செய்து ரயிலை ஒரு மணி நேரத்திற்கு நிறுத்திய குறும்புக்கார இளைஞர்!!

கரன்ட் கம்பியில் நடக்கும் இளைஞர்.

Gwalior:

மின் கம்பியில் ஊஞ்சலாடிய இளைஞர் ஒருவர், மின் தடையை ஏற்படுத்தி ரயிலை ஒரு மணி நேரத்திற்கு நிறுத்தி வைத்தார். அவருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தை, இளைஞரை கீழே இறக்கினார்கள். 

ஒரு மணிநேரமாக ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினார்கள். மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே ஜான்சி ரயில் மண்டலத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 

இங்கு இன்று காலை 6 மணிக்கு வந்த இளைஞர் ஒருவர், மின்கம்பியை பிடித்து ஊஞ்சலாடத் தொடங்கினார். இதனால், மின்தடை ஏற்பட்டதால் இணைப்புத் தடத்தில் இருந்த ரயில்கள் ஆங்காங்கே நின்றன. 

பின்னர் அதிகாரிகள் இளைஞருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை கீழே இறங்க வைத்தனர். இதன்பின்னர், ரயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டுச் சென்றன. 

எதற்காக இளைஞர் இந்த காரியத்தை செய்தார் என்பது தெரியவில்லை. அதிகாரிகள் அவரை ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
 

More News