This Article is From Oct 23, 2018

மத்திய பிரதேச மாநில தேர்தல் - முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சிவசேனா

மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. முடிவுகள் டிசம்பர் 11-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன

மத்திய பிரதேச மாநில தேர்தல்  - முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சிவசேனா

முதல் வேட்பாளர்கள் பட்டியலில் 21 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Bhopal:

மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் சிவசேனா கட்சியும் போட்டியிடுகிறது. கடந்த 2013-ல் நடந்த தேர்தலின்போது அக்கட்சி 26 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 28-ம்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் முடிவுகள் டிசம்பர் 11-ம் தேதி அறிவிக்கப்படுகின்றன. மொத்தம் 230 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 21 பேர் இடம் பெற்றுள்ளனர். அடுத்த கட்ட பட்டியல் 25-ம்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி காணப்படுகிறது. தொடர்ந்து 3-முறையாக சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு கடந்த 2003-ல் இருந்து மத்திய பிரதேசத்தில் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

.