This Article is From Jun 22, 2018

பெண் குழந்தைகளுடன் உடற்பயிற்சி செய்யும் அப்பா… ஒரு க்யூட் வீடியோ!

பிரதமர் மோடி முதல் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வரை பலர் ‘ஃபிட்னஸ் சேலஞ்ச்’ வீடியோக்களை ரிலீஸ் செய்து வருகின்றனர்

பெண் குழந்தைகளுடன் உடற்பயிற்சி செய்யும் அப்பா… ஒரு க்யூட் வீடியோ!

ஹைலைட்ஸ்

  • ம.பி-யைச் சேர்ந்த முன்னாள் வாலி-பால் வீரர் பிரமோத் கார்பென்டர்
  • அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்
  • மகள்களும், கார்பென்டருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்கின்றனர்
பிரதமர் மோடி முதல் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வரை பலர் ‘ஃபிட்னஸ் சேலஞ்ச்’ வீடியோக்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதாகும் பிரமோத் கார்பென்டர், தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் சேர்ந்து செய்யும் உடற்பயிற்சி வீடியோ உங்கள் மனதை உருகவைக்கும்.

தனது 3 வயது மூத்த மகள் பிஹு மறும் 6 மாத இளைய மகள் ப்ரெக்‌ஷா ஆகியோருடன் தன்டால், சிட்-அப்ஸ், புஷ்-அப்ஸ், என பல வித உடற்பயிற்சிகளை கார்பென்டர் செய்கிறார். இந்த அனைத்து உடற்பயிற்சிகளையும் அவரின் மூத்த மகளும் செய்ய முயல்கிறாள். சுமார் 2:30 நிமிடம் இந்த உடற்பயிற்சி வீடியோ ஓடுகிறது. சமூக வலைதளங்களில் மிக வைரலாகி வருகிறது இந்த வீடியோ.

முன்னாள் தேசிய அளவு வாலி-பால் விளையாட்டு வீரரான கார்பென்டர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல வாலிபர்களுக்கு இந்த விளையாட்டு குறித்து பயிற்சி கொடுத்து வருகிறார். தனது மகள்களுடனான வீடியோ குறித்து கார்பென்டர், ‘பெண் குழந்தைகள் என்பது சுமை அல்ல. இன்னும் சொல்லப் போனால் இந்த வயதிலேயே அவர்கள் காட்டும் ஆர்வ மிகுதியில் கண்டிப்பாக மிகப் பெரிய நட்சத்திரங்களாக ஜொலிப்பர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை’ என்றார் பெருமிதத்துடன்.

Click for more trending news


.