This Article is From Mar 11, 2020

மோடி-அமித்ஷா கீழ் சிறப்பாக வளர சிந்தியாவுக்கு, திக்விஜயசிங் வாழ்த்து

அவரை யாரும் புறக்கணிக்கவில்லை. உண்மையில், தயவுசெய்து குவாலியர் தொகுதி காங்கிரஸ் தலைவரிடமும் கேளுங்கள், கடந்த 16 மாதங்களில் அவரது அனுமதியின்றி இந்த பகுதியில் எதுவும் நகரவில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

மோடி-அமித்ஷா கீழ் சிறப்பாக வளர சிந்தியாவுக்கு, திக்விஜயசிங் வாழ்த்து

Madhya Pradesh crisis: Digvijaya Singh said Jyotiraditya Scindia's role was not small in Congress

ஹைலைட்ஸ்

  • Mr Scindia had reportedly been unhappy with Congress leadership
  • "It is now time for me to move on," he said in resignation letter
  • "He was not at all sidelined," Digvijaya Singh said
New Delhi:

மத்தியப் பிரதேச நெருக்கடி: ஜோதிராதித்ய சிந்தியா சில காலமாகக் காங்கிரஸ் தலைமையில் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது

காங்கிரஸ் கட்சியில் சிந்தியாவின் பங்கேற்பு குறைந்து வந்ததே அவர் வெளியேறியதற்கான காரணம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜயசிங் குறிப்பிட்டிருக்கிறார்.

செவ்வாயன்று, சிந்தியா காங்கிரசிலிருந்து விலகினார். மேலும் அவர் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் "இப்போது நான் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.  மேலும் "எனது மக்கள் மற்றும் எனது தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கவும் உணரவும் நான் இப்போது ஒரு புதிய தொடக்கத்தை எதிர்நோக்குவதே சிறந்தது என்று நம்புகிறேன்." என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சிந்தியா சுமார் ஒரு வருடமாகக் காங்கிரஸ் தலைமையுடன் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. காந்தி குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த அவர், 2018 ல் முதல்வர் பதிக்கான போட்டியில் கமல்நாத்திடம் தோல்வியடைந்தார், மத்தியப்பிரதேச தேர்தலில் கட்சி வெற்றி பெற்றபோது, ​​23 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை மட்டுமே அவரால் காட்ட முடியும் என்பதால் கமல்நாத் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

"அவரை யாரும் புறக்கணிக்கவில்லை. உண்மையில், தயவுசெய்து குவாலியர் தொகுதி காங்கிரஸ் தலைவரிடமும் கேளுங்கள், கடந்த 16 மாதங்களில் அவரது அனுமதியின்றி இந்த பகுதியில் எதுவும் நகரவில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். வருத்தமாக இருக்கிறது, ஆனால் நான் அவரை நேசிக்கின்றேன் மோடி-ஷா பயிற்சியின் கீழ் சிறப்பாகச் செயல்பட நான் அவரை வாழ்த்துகிறேன்." என்று திக்விஜயா சிங் இன்று காலை செய்த ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

மோடிஷா அரசாங்கத்தின் கீழ் இந்தியாவுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை அவர் காண்கிறார், நமது வங்கிகள் சரிந்து கொண்டிருக்கும் போது நமது ரூபாய் வீழ்ச்சியடைந்து வருகிறது, நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது, நமது சமூக கட்டமைப்பு அழிக்கப்படுகிறது. அப்படியே இருங்கள் ”என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், "சிந்தியா, அமித் ஷா அல்லது நிர்மலா சீதாராமன் போன்றோருக்கு மாற்றாக வர வேண்டும். அவருடைய திறமையை அவர் உணர்ந்துகொண்டால், அவர் நிச்சயமாகத் தனது பணிகளைச் சிறப்பாகச்  செய்வார். மோடி-ஷா பயிற்சியின் கீழ் வளரும் மகாராஜாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மத்தியப் பிரதேசத்தில் அதிகாரத்தின் மீதான மோதல் சட்டசபையில் பலம் காட்டுவதை நோக்கி நகர்ந்ததால் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் ஆதரவாளர்களைப் பாதுகாக்க இயக்க உத்திகளை வகுத்துள்ளன.

21 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால், அரசாங்கம் சிறுபான்மையினராகக் குறைக்கப்பட்டுக் கவிழ்க்கப்படலாம். ஆனால், காங்கிரஸ் தனது பலம் குறையவில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றது. மேலும், பெங்களூருவில் ஹோட்டலில் உள்ள சில எம்.எல்.ஏக்கள் திரும்பி வர விருப்பம் தெரிவித்துள்ளதாகக் காங்கிரஸ் குறிப்பிட்டிருக்கின்றது.

பாஜக தனது எம்.எல்.ஏ.க்களை போபாலில் இருந்து குர்கானில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ.க்களை ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூருக்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகின்றது. செவ்வாயன்று நடந்த காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டத்தில், பா.ஜ.க வசம் உள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மீட்டு வருவதற்கான யுத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கின்றது.

.