This Article is From Mar 18, 2020

அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்கச் சென்ற திக்விஜய சிங் தடுத்து நிறுத்தம்!

Madhya Pradesh Crisis: பெங்களூர் விமான நிலையம் வந்த திக்விஜய சிங்கை, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வரவேற்றார்.

அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்கச் சென்ற திக்விஜய சிங் தடுத்து நிறுத்தம்!

அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க சென்ற திக்விஜய சிங் தடுத்து நிறுத்தம்!!

Bengaluru:

மத்தியப் பிரதேச எம்எல்ஏக்கள் தங்கியுள்ள பெங்களூரு சொகுசு விடுதிக்குச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங், அங்கு விடுதிக்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவர் காவல்துறையால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் விடுதிக்குள் நுழைவதை காவல்துறை தடுத்து நிறுத்தியதாகத் தெரிகிறது. 

பெங்களூர் விமான நிலையம் வந்த திக்விஜய சிங்கை, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வரவேற்றார். 

தொடர்ந்து, 22 அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு காங்கிரஸ் தலைவர்கள் சென்றனர். அந்த 22 எம்எல்ஏக்களும் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். இதனால், 15 மாதங்களே ஆன கமல்நாத் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திக்விஜய சிங் கூறும்போது, அந்த எம்எல்ஏக்கள் சிறையாக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து எங்களுக்குச் செய்திகள் வந்தன. அவர்கள் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தனிப்பட்ட முறையில் நான் 5 எம்எல்ஏக்களுடன் பேசினேன். அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது செல்போன்கள் பறிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். ஒவ்வொரு அறைக்கும் முன்பாகவும் 24மணி நேரமும் காவல்துறை உள்ளனர் என்று அவர் கூறினார். 

தங்களது எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை விடுவிக்க உச்ச நீதிமன்ற தலையீட்டைக் காங்கிரஸ் அணுகியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்களும் சட்டசபையில் ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. 

இதேபோல், பெங்களூரில் உள்ள எம்எல்ஏக்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர் லால்ஜி டான்டனுக்கு சபாநாயகர் கடிதம் எழுதியுள்ளார். அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களை யாரும் சிறைபிடிக்கவில்லை என்றும் சொந்த விருப்பத்தின் பேரிலே ராஜினாமா செய்ததாகவும், செய்தியாளர்களைச் சந்திப்பில் கூறியதைத் தொடர்ந்து, 10 மணி நேரத்திற்குப் பின்னர் இந்த கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

.