This Article is From May 27, 2019

தன் மகளை அங்கன்வாடியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர்…!

பொறுப்பான அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை இந்த இடங்களுக்கு அனுப்பும் போது, அங்கு இடங்களின் பராமரிப்பும் பாதுகாப்பும் மேம்படுகிறது. மேலும், மேம்பாட்டுக்கான முயற்சிகளும் எடுக்கப்படுகிறது என்று கூறினார்.

தன் மகளை அங்கன்வாடியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர்…!

கெட்னி மாவட்ட ஆட்சியர் பங்கஞ் செயின் தனது மகளை அங்கன்வாடிக்கு அனுப்புகிறார்

Bhopal:

மத்திய பிரதேசத்ரில் உள்ள கெட்னி மாவட்ட ஆட்சியர்  பங்கஞ் செயின் தனது மகளை கிராமப்புற குழந்தை பராமரிப்பு மையமாக அங்கன்வாடிக்கு அனுப்புகிறார்.  பல தனியார் பள்ளிகளை விட இது சிறந்தது என்கிறார். 

பொறுப்பான அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை இந்த இடங்களுக்கு அனுப்பும் போது, அங்கு இடங்களின் பராமரிப்பும் பாதுகாப்பும் மேம்படுகிறது. மேலும், மேம்பாட்டுக்கான முயற்சிகளும் எடுக்கப்படுகிறது என்று கூறினார்.

ஆளுநர் ஆனந்தீபன் படேல் ஆட்சியர் ஜெயினை வாழ்த்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஞாயிறு அன்று இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. 

மக்களுக்காக சேவை செய்பவர்கள் சமுதாயத்திற்கு முன் மாதிரிகளாக செயல்பட வேண்டும். உங்களின் முயற்சிகள் அரசு ஊழியர்களின் பொறுப்பை அதிகரிக்கும் என்று ஆளுநர் கடிதத்தில் கூறியிருந்தார். 

அரசு ஊழியராக உங்களின் அர்ப்பணிப்பான பணியைத் தொடருங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

.