“திருட்டுத்தனமான செயல்…”- மேட்டுப்பாளையம் களத்துக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் அரசு மீது குற்றச்சாட்டு!

Mettupalayam House Collapsed News - "அலட்சியத்தால் தற்போது 17 உயிர்கள் பறிபோயுள்ளன"

“திருட்டுத்தனமான செயல்…”- மேட்டுப்பாளையம் களத்துக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் அரசு மீது குற்றச்சாட்டு!

Mettupalayam House Collapsed News - "அரசு சார்பில் 4 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் போதாது. நிவாரண நிதி அதிகமாக வழங்கப்பட வேண்டும்"

Mettupalayam House Collapsed News - கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் 3 ஓட்டு வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததில் 10 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண நிதியை அறிவித்துள்ளது தமிழக அரசு. இன்று நடூர் பகுதிக்குச் சென்ற தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நடூர் பகுதியில் மிகவும் பலீகனமாக இருந்த கட்டுமானம் குறித்து உள்ளூர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், அரசு தரப்பிடம் இங்குள்ள மக்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வந்துள்ளனர். ஆனால், அதை அலட்சியமாகக் கருதியது அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பு. அந்த அலட்சியத்தால் தற்போது 17 உயிர்கள் பறிபோயுள்ளன. இதை முற்றிலும் தவிர்த்திருக்கலாம். ஆனால், இந்த அரசும் அதிகாரிகளும் சரியாக செயல்படாத காரணத்தினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

இறந்தவர்களை யாருக்கும் தெரிவிக்காமல் திருட்டுத்தனமாக எடுத்துச் சென்ற அரசு தரப்பு, அவர்களுக்கு பிரேதப் பரிசோதனை செய்து உடலை குடும்பத்தினரிடம் கொடுக்க முற்பட்டுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த அராஜகப்போக்குக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக பொது மக்களைத் தாக்கிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னைக்குக் காரணமானவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும்.

அரசு சார்பில் 4 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் போதாது. நிவாரண நிதி அதிகமாக வழங்கப்பட வேண்டும்,” என்று கூறினார். 
 

More News