புதிய பாஸ்போர்ட்டுகளில் தாமரைச் சின்னம் : விளக்கமளித்த மத்திய அரசு

தாமரை தவிர, பிற தேசிய சின்னங்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும்.

புதிய பாஸ்போர்ட்டுகளில் தாமரைச் சின்னம் : விளக்கமளித்த மத்திய அரசு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வழங்கப்பட்ட புதிய பாஸ்போர்ட்டுகளில் தாமரை சின்னம் அச்சிடப்பட்டுள்ளது

New Delhi:

பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டே, நம் நாட்டின் தேசிய மலரான தாமரை புதிய பாஸ்போர்ட்களில் படம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வழங்கப்பட்ட புதிய பாஸ்போர்ட்டுகளில் தாமரை சின்னம் அச்சிடப்பட்டுள்ளது குறித்து காங்கிரஸில் எம். கே. ராகவன் கேள்வி எழுப்பினார். செய்திதாள்களிலும் இந்த விவகாரம் முன்னிலைப்படுத்தப்பட்டது. இது அரசின் ‘காவிமயமாக்கத்தின்' தொடர்ச்சி என்று குற்றம் சாட்டியது. தாமரை பாஜகவின் தேர்தல் சின்னமுமாக உள்ளது.

இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், “இந்த சின்னம் நம் நாட்டின் தேசிய மலர் மேலும் போலி பாஸ்போர்ட்டுகளை அடையாளம் காண மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாகும்” என்றார்.

இந்த பாதுகாப்பு அம்சங்கள் சர்வதேச சிவில் விமான அமைப்பு வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றார். “தாமரை தவிர, பிற தேசிய சின்னங்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும். இப்போது அது தாமரை, பின்னர் அடுத்த வாரம் வேறு ஏதாவது இருக்கு. தேசிய மலர் அல்லது தேசிய விலங்கு போன்ற இந்தியாவுடன் தொடர்பான அடையாளங்களாக இருக்கும்" என்றார்.

More News