அமெரிக்க பாஸ்போர்ட்டை ஆஸ்திரியாவில் தொலைத்துவிட்டீர்களா? மெக்டோனல்ட்ஸை அனுகுங்கள்!

இது குறித்து தகவல் கூறியுள்ள எம்பசி,"நீங்கள் உங்கள் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டால், மெக்டோனல்ட்ஸில் உள்ள பணியாளர்கள், அமெரிக்க எம்பசியை தொடர்புகொள்ள உதவுவார்கள்" என கூறியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
அமெரிக்க பாஸ்போர்ட்டை ஆஸ்திரியாவில் தொலைத்துவிட்டீர்களா? மெக்டோனல்ட்ஸை அனுகுங்கள்!

அமெரிக்க எம்பசியிடம் தொடர்புகொள்ள இந்த மெக்டோனட்ல்ஸ் நிறுவனம் உதவும்

Vienna, Austria: 

ஊங்கள் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டு, உதவிக்காக காத்திருக்கிறீர்களா? ஆஸ்திரியாவிலுள்ள, அமெரிக்க குடிமக்கள் ஒருவேளை உங்கள் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டீர்கள் என்றால்,நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஒரு வித்தியாசமான இடத்தை அணுகினால் போதும், அதற்கான நடவடிக்கை அங்கு எடுக்கப்படும். மெக்டோனல்ட்ஸ் தான் அந்த வித்தியாசமான இடம். 

மெக்டோனல்ட்ஸ்-க்கு போன சாப்பிட எதாவது கிடைக்கும், ஆனால், பாஸ்போர்ட் எல்லாம் எப்படி கிடைக்கும்? 

புதியதாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின்படி, ஆஸ்திரியா முழுவதும் இருக்கும் இந்த அமெரிக்க உணவு நிறுவனம், ஒருவேளை நீங்கள் உங்கள் அமெரிக்க பாஸ்போர்ட்டை ஆஸ்திரியாவில் தொலைத்துவிட்டீர்கள் என்றால், இந்த மெக்டோனல்ட்ஸை அணுகினால், அவர்கள் அமெரிக்க எம்பசியிடம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள்.

இது குறித்து தகவல் கூறியுள்ள எம்பசி,"நீங்கள் உங்கள் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டால், மெக்டோனல்ட்ஸில் உள்ள பணியாளர்கள், அமெரிக்க எம்பசியை தொடர்புகொள்ள உதவுவார்கள்" என கூறியுள்ளது.

ஆஸ்திரியா மட்டுமின்றி வேறு நாடுகளில் இந்த சேவை உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு எந்த பதிலையும் அந்த எம்பசி அளிக்கவில்லை.

பலரும் அற்புதமான சேவை என குறிப்பிட்டுள்ளனர். மேலும், 'மெக்விசா' மற்றும் 'மெக்பாஸ்போர்ட்' என்றும் பலர் கூறியுள்ளனர். 
 
Click for more trending news

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................